நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது பாலஸ்தீன ஆதரவாளர் ஓருவர் அத்துமீறி ஆடுகளத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேத்தில் நடந்து வரும் போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது கோலி மற்றும் ராகுல் விளையாடி வந்த நிலையில், பாலஸ்தீன ஆதரவாளர் ஓருவர் அத்துமீறி மைதானத்திற்குள் நுழைந்தார்.
இஸ்ரேலுடன் நடந்து வரும் மோதல் தொடர்பாக, ’பாலஸ்தீனம் மீது குண்டு வீசுவதை நிறுத்துங்கள்’ என்ற வாசகங்கள் எழுதிய சட்டையை அணிந்து கொண்டு அந்த நபர் ஆடுகளத்தில் நுழைந்தார்
விராட் கோலி, கே.எல். ராகுலுடன் பேட் செய்த செய்துக் கொண்டிருந்தப்போது, பாலஸ்தீன கொடி முகமூடியை அணிந்து கொண்டு, அந்த நபர் விராட் கோலியை நோக்கி விரைந்ததால், ஆட்டம் நிறுத்தப்பட்டது.
உடனடியாக மைதான எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினர் அத்துமீறி நுழைந்த நபரை பிடித்து அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்டு, வெளியேற்றப்பட்ட நபர் கூறுகையில், ”என்னுடைய பெயர் ஜான். நான் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருக்கிறேன். விராட் கோலியைக் காணவே மைதானத்திற்குள் நுழைந்தேன். நான் ஒரு பாலஸ்தீன ஆதரவாளன்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“