Olympian basketball player Kobe Bryant dies in helicopter crash : அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸ் லீக்கர்ஸ் என்ற புகழ்பெற்ற பேஸ்கெட்பால் டீமின் விளையாட்டு வீரராக இருந்தவர் கோப் ப்ரையாண்ட். 2016ம் ஆண்டு கூடைப்பந்தாட்ட போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இவரின் வயது 41 ஆகும். இவரும் இவருடைய 13 வயது மகள் உட்பட 9 பேர் பயணித்த ஹெலிகாப்டர் நேற்று அமெரிக்காவில் விழுந்து நொறுங்கியது.
கண்ணீர்விட்டு கதறி அழும் ரசிகர்கள்
லாஸ் ஏஞ்செல்ஸ்க்கு 30 மைல்கள் வடமேற்கில் அமைந்திருக்கும் கலாபசாஸ் என்ற இடத்தில் மூடு பனி காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தன்னுடைய வீடு அமைந்திருக்கும் ஆரஞ்ச் கண்ட்டியில் இருந்து அவருடைய பேஸ்கட்பால் அகாடெமியில் நடைபெற இருக்கும் போட்டி ஒன்றை காண்பதற்காக அவர்கள் அந்த ஹெலிகாப்ப்டரில் சென்றது குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற இருந்த போட்டியில் அவருடைய மகள் கியன்னாவும் பங்கேற்க இருந்தது குறிப்பிடத்தக்கது. 2016ம் ஆண்டு 5 முறை என்.பி.ஏ சாம்பியன்ஷிப் ரிங்க்ஸுடன் அவர் பேஸ்கட்பால் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார்.
இது தொடர்பான முழுமையான செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
ஸ்டாப்லெஸ் சென்ட்ரில் பொதுமக்கள் அஞ்சலி
பிலடெல்ஃபியாவில் ஜோய் மற்றும் பாம் ப்ரையாண்ட் தம்பதிகளுக்கு மகனாக பிறந்த கோப் தன்னுடைய இளமை காலங்களை இத்தாலியில் கழித்தார். அவருடைய அப்பா ஐரோப்பில் சிறந்த பேஸ்கட்பால் பிளேயராக இருந்தது குறிப்பிடத்தக்கது. என்.பி.ஏவில் மகத்தான சாதனைகள் புரிந்த இவர் இரண்டு முறை ஒலிம்பிக் தங்க பதக்கங்களையும் வென்றுள்ளார். மேலும் 2018ம் ஆண்டு இவருடைய அனிமேட்டட் குறும்படமான டியர் பேஸ்கட்பால் (Dear Basketball) என்ற படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
பாரக் ஒபாமா இரங்கல்
பாரக் ஒபாமா அதிபராக பணியாற்றிய போது, கோப்புடன் நல்ல நட்பில் இருந்தார். இவ்விருவருக்கும் இடையே இருந்த கூடைப்பந்தாட்டத்தின் மீதான காதல் இவர்களை நெருங்கிய நண்பர்களாக மாற்றியது. இரண்டு மூன்று முறைகள் இவ்விருவரும் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசியுள்ளனர். கியன்னாவின் இழப்பு என்பது பெற்றோர்களாக மேலும் எங்களை வேதனை அடைய செய்கிறது என்று இன்று காலை ட்வீட்டில் குறிப்பிட்டு தன்னுடைய இரங்கலை பதிவு செய்துள்ளார் முன்னாள் அதிபர்.