Advertisment

வெப்பம் - சத்தம் மத்தியில் போராட்டம்... மரத்தடியில் உறங்கிய ஒலிம்பிக் தங்கம் வென்ற வீரர்!

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவருக்கான 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் போட்டியில் தங்கம் வென்ற இத்தாலி வீரர் தாமஸ் செக்கோன், ஒரு பூங்காவில் மரத்திற்கு அடியில் தூங்கிக் கொண்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Olympic gold medalist Thomas Ceccon sleeps in park after complaining about appalling conditions at Games village in Paris Tamil News

ஒலிம்பிக் கிராமத்திற்கு அருகில் இருக்கும் பூங்காவில் உள்ள மரத்தடியில் வெள்ளை டவலை விரித்து உறங்கியுள்ளார் தங்கப் பதக்கம் வென்ற தாமஸ் செக்கோன்.

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். 

Advertisment

இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் ஆடவருக்கான 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் போட்டியில் தங்கம் வென்ற இத்தாலி வீரர் தாமஸ் செக்கோன், ஒரு பூங்காவில் மரத்திற்கு அடியில் தூங்கிக் கொண்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாட்டு கிராமத்தில் இருக்கும் குடியிருப்புகள் மற்றும் அறைகள் மிக மோசமாக இருப்பதாகவும், அங்கு தங்கும் வசதிகள் குறித்தும் புகார் தெரிவித்துள்ள அவர், கிராமத்திற்கு அருகில் இருக்கும் பூங்காவில் உள்ள மரத்தடியில் வெள்ளை டவலை விரித்து உறங்கியுள்ளார் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற தாமஸ் செக்கோன். அவர் இப்படி உறங்குவதை சவுதி அரேபியா படகோட்டும் வீரர் ஹுசைன் அலிரேசா புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Olympic gold medalist Thomas Ceccon sleeps in park after complaining about appalling conditions at Games village in Paris

இதுகுறித்து ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற இத்தாலியின் தாமஸ் செக்கோன்பேசுகையில், "பல விளையாட்டு வீரர்கள் இந்த காரணத்தைக் கூறி தான்  நகர்ந்து வருகிறார்கள். இது ஒரு சாக்கு அல்ல, இது அனைவருக்கும் தெரியாத உண்மை.

வழக்கமாக, நான் வீட்டில் இருக்கும்போது, ​​நான் எப்போதும் மதியம் தூங்குவேன்: இங்கே நான் உண்மையில் வெப்பத்திற்கும் சத்தத்திற்கும் இடையில் போராடுகிறேன்." அவர் கூறினார். 

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இரண்டு முக்கிய இடங்களான பாரிஸ் மற்றும் சாட்யூரோக்ஸ் ஆகிய இரண்டு நகரத்திலும் வெப்பநிலை உயர்ந்துள்ளது. தங்குமிடம் பற்றி இத்தாலி வீரர் தாமஸ் செக்கோன் மட்டும் குறை கூறவில்லை. அமெரிக்காவின் டென்னிஸ் வீராங்கனை கோகோ காஃப், ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை அரியர்னே டிட்மஸ், பிரான்சின் நீச்சல் வீராங்கனை ஆசியா டூவாட்டி உள்ளிட்டோரும் பாரீஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்களை தொடர்பு கொண்டு தங்களது தங்குமிடத்தில் இருக்கும் குறைகள் குறித்து தெரிவித்துள்ளார்கள். 

400 மீட்டர் ஃப்ரீஸ்டைலில் மீண்டும் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற பிறகு, நீச்சல் வீராங்கனை அரியர்னே டிட்மஸ், தான் இன்னும் சிறந்த தங்குமிடங்களில் தங்கியிருந்தால் உலக சாதனையை முறியடித்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார். "நான் திறமையானவள் என்று நான் நினைத்த நேரம் இதுவல்ல, ஆனால் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருப்பது தான் அதனைச் செய்வதை கடினமாக்குகிறது. இது நிச்சயமாக உயர் செயல்திறனுக்காக உருவாக்கப்படவில்லை. எனவே, இந்த போட்டியின் போது யார் தான் தங்களது மனதை ஒன்றாக வைத்திருக்க முடியும்?" என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். 

எவ்வாறாயினும், ஒலிம்பிக் அதிகாரிகள் இந்த ஆண்டு படுக்கைகளைத் தேர்ந்தெடுத்ததற்கு முதன்மைக் காரணம் நிலைத்தன்மை என்று அமைப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மெத்தைகள் மற்றும் அட்டைப் பிரேம்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட அட்டைப் பெட்டியால் செய்யப்பட்ட படுக்கை தளங்களுடன் 100% மறுசுழற்சி செய்யக்கூடியவை.

பாரிஸில் விளையாட்டுகள் தொடங்குவதற்கு முன்பே, நிகழ்வின் கார்பன் பயன்பட்டதை குறைக்க ஏர் கண்டிஷனிங்கைத் (ஏ.சி) தவிர்ப்பதாக அமைப்பாளர்கள் கூறியதைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பாரிஸின் வானிலை குறித்து தங்கள் கவலைகளை வெளிப்படுத்தினர். விளையாட்டு கிராமத்தில் உள்ள விளையாட்டு வீரர்களுக்காக இந்திய அரசு 40 போர்ட்டபிள் ஏர் கண்டிஷனர்களை (ஏ.சி) அனுப்பியுள்ளது குறிப்பித்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Paris 2024 Olympics
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment