குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது ஒரு அதிசயம் என இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ஜாம்பவான் மகேந்திர சிங் தோனியால் மட்டுமே இதுபோன்ற வெற்றியை நடத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
சென்னையை சேர்ந்த இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் இந்தியன் பிரீமியர் லீக் அணியான சென்னை சூப்பர் கிங்ஸின் முதன்மை ஸ்பான்சராக உள்ளது.
இந்நிலையில், ஸ்ரீநிவாசன் செவ்வாய்கிழமை (மே 30) காலை சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம், "மிகப்பெரிய வெற்றிக்கு" அவரையும் அவரது அணியையும் வாழ்த்தினார்.
மேலும் தோனியிடம், “அருமை கேப்டன். நீங்கள் ஒரு அதிசயம் செய்துள்ளீர்கள். இது உங்களால் மட்டுமே முடியும். அணிக்காக நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களாக தொடரும் போட்டி அட்டவணையை பின்பற்றி ஓய்வெடுக்க தோனிக்கு அறிவுறுத்திய அவர், வெற்றியை கொண்டாடுவதற்காக அணியுடன் சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
அகமதாபாத்தில் திங்கள்கிழமை இரவு இறுதிப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“