Owen Coyle returns to Chennaiyin FC Tamil News: 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி வருகிற செப்டம்பர் முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான முன்னாள் சாம்பியன் சென்னையின் எஃப்.சி.-யின் புதிய தலைமை பயிற்சியாளராக ஓவென் கோயல் (ஸ்காட்லாந்து) நியமிக்கப்பட்டுள்ளார். அவரை ஓராண்டு ஒப்பந்தம் அடிப்படையில் நேற்று சென்னையின் எஃப்.சி நிர்வாகம் நியமித்தது.
Advertisment
ஓவென் கோயல் ஏற்கனவே 2019-20-ம் ஆண்டு சீசனில் சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். 2021-22-ம் ஆண்டில் அவரது பயிற்சியின் கீழ் ஜாம்ஷெட்பூர் எப்.சி. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இங்கிலாந்தில் பிரபலமான பிரிமீயர் லீக் கால்பந்தில் பர்ன்லி, போல்டன் ஆகிய கிளப் அணிகளுக்கும் பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றி இருக்கிறார்.
“I'm excited to replicate the successes that the club had previously for our wonderful fans."
இது குறித்து 57 வயதான ஓவென் கோயல் பேசுகையில், 'சென்னை அணிக்கு மீண்டும் திரும்புவது உண்மையிலேயே உற்சாகம் தருகிறது. கடைசியாக சென்னை அணியுடன் இணைந்து பணியாற்றியது அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்த கிளப் ஏற்கனவே இரு முறை பட்டம் வென்றுள்ளது. அதே போன்று மீண்டும் சாதிக்க முயற்சிப்போம். புதிய சீசனை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்' என்று கூறியுள்ளார்.
சென்னையின் எஃப்.சி இணை உரிமையாளர் விடா டானி பேசுகையில், “ஓவென் இந்தியாவுக்கு புதியவர் அல்ல, அவர் இங்கே என்ன செய்ய முடியும் என்பதை நாங்கள் அனைவரும் பார்த்தோம். எங்கள் இளம் அணியை முன்னோக்கி வழிநடத்த அவர் தான் சரியான மனிதர்.
தற்போது ஸ்காட்லாந்தின் குயின்ஸ் பார்க் கால்பந்து கிளப் பயிற்சியாளராக இருந்து வரும் ஓவென் ஆகஸ்ட் மாதம் சென்னையின் எஃப்.சி. பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க உள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil