நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளான, பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ போன்ற விருதுகளை வழங்க தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை நேற்று மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டது . இந்த பட்டியலில் பல்வேறு துறைகளில் சாதனை செய்த தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், இளம் வயதிலே இந்திய தேசிய மகளிர் கூடைப்பந்தாட்ட அணியின் கேப்டனாக பொறுப்பேற்று பல்வேறு சாதனைகளைச் செய்த அனிதா பால்துரையும் ஒருவர்.
அனிதா பவுல்துறை சென்னையில் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். பள்ளிப் பருவத்தில் அனைத்து விளையாட்டுகளிலும் ஆர்வமுடன் கலந்து கொண்டு விளையாடினார். தடகள போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், விளையாட்டு ஆசிரியரின் வழிகாட்டுதலால் கூடைப்பந்து விளையாடுவதிலும் கவனம் செலுத்த தொடங்கினார். 10-ம் வகுப்பு படிக்கும் போது இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் அவரை தொற்றிக் கொண்டுடது. எனவே அவருக்கு எதிராக இருந்த பல தடைகளை தகர்த்தெறிந்து, இடைவிடாத பயிற்சி மேற்கொண்டு இந்திய அணியில் விளையாட வாய்ப்பை பெற்றார். இந்திய அணியில் சிறப்பாக விளையாடியதால் அணியின் கேப்டனாகும் பொறுப்பு அவரைத் தேடி வந்தது.
அனிதா பால்துரை, தனது இளமைக் காலத்தை இந்திய அணிக்காகவே அர்பணித்து சுமார் 18 ஆண்டுகள் (2000 - 2017) இந்திய அணிக்காக விளையாடியவர். இவர் கூடைப்பந்தாட்டத்தில் பந்தை மிக நேர்த்தியாக கையாளும் தனித்தன்மை கொண்டவராக திகழ்ந்தவர். அதோடு பந்தை ட்ரிபிள் செய்யும் விதம், கூடையை நோக்கி எயிம் செய்யும் பாங்கு, எதிரணி வீராங்கனையை கிராஸ் ஓவர் செய்து பந்தை கூடையின் உள்ளே அனுப்பும் விதம் என (NBA) என்பிஎ அணிகளில் விளையாடும் வீரருக்கு உள்ள அனைத்து தகுதிகளையும் பெற்றவர். இந்த தலைசிறந்த வீராங்கனை தேசிய அளவில் நடந்த போட்டிகளில் 30 பதக்கங்களைப் தட்டிச் சென்றுள்ளார். அதோடு ஆசிய சாம்பியன்ஷிப், காமன்வெல்த் போட்டி போன்ற சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி பல தங்கப் பதங்ககளை வென்றுள்ளார்.
கடந்த ஆறு வருடங்களாக 'அர்ஜுனா விருது' பெற வேண்டும் என்ற இலக்கை நோக்கி இருந்த இவருக்கு, தற்போது பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil