சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Pakistan vs Bangladesh LIVE Cricket Score, Champions Trophy 2025
இந்தத் தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். தற்போதைய நிலவரப்படி, சாம்பியன்ஸ் டிராபியில் 'ஏ' பிரிவில் உள்ள இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. வங்கதேசம் பாகிஸ்தான் அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.
'பி' பிரிவில் மட்டும் இன்னும் முடிவு கிடைக்கவில்லை. இந்த நிலையில், ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கி நடைபெறுகின்ற 9-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோத இருந்தன.
ரத்து
ஆனால், ராவல்பிண்டியில் தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்து வந்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. போட்டி மழையால் கைவிடப்பட்டதால், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/184d22bc-dd1.jpg)
ஒரு புள்ளியைப் பெற்றாலும் இந்த இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை. அதனால், தொடரில் எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை. முன்னதாக, ராவல்பிண்டியில் தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதவிருந்த போட்டியும் தொடர் மழை காரணமாக கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.