/tamil-ie/media/media_files/uploads/2019/07/z1198.jpg)
PAK vs BAN Live Score, Pakistan vs Bangladesh World Cup Live Score
Bangladesh vs Pakistan World Cup 2019 Live Score: உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில், இன்று(ஜூன்.5) லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சர்ஃபராஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், மஷ்ராபே மோர்டசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதுகின்றன.
இந்தியாவுடனான தோல்விக்குப் பிறகு வங்கதேச அணி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது. எட்டு போட்டிகளில் விளையாடி 3 வெற்றி மற்றும் 4 தோல்விகளுடன் தொடரில் இருந்து வெளியேறியது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை, அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமெனில், நடைமுறைக்கு சாத்தியமே இல்லாத வெற்றியை பெற வேண்டும். 350 ரன்கள் அடித்தால், 311 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் போட்டியை லைவாக காணலாம். ஆன்லைனில், ஹாட்ஸ்டார் 'விஐபி' சந்தா செலுத்தி போட்டியை காணலாம். தவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளம் வழங்கும் பிரத்யேக ஸ்கோர் கார்டு மூலம், ஸ்கோர் விவரங்களை உடனுக்குடன் நீங்கள் அறியலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us