Pakistan vs Hong Kong, Asia Cup 2022 – score updates in tamil: 15-வது ஆசிய கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெற்று வருகின்றன. இதில், இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங், இலங்கை, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த 6 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு, ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இதில், ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியா, ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் ஏற்கனவே சூப்பர் “4” சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. இந்நிலையில், ‘ஏ’ பிரிவில் சூப்பர் “4” சுற்றுக்கு முன்னேறும் மற்றொரு அணி எது? என்பதை நிர்ணயிக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஹாங்காங் அணிகள் மோதின. நேற்று இரவு 7:30 மணிக்கு அரங்கேறிய இந்த ஆட்டம் சார்ஜா மைதானத்தில் நடக்கிறது.
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி மற்றும் நிஜாகத் கான் தலைமையிலான ஹாங்காங் அணி அதன் தொடக்க ஆட்டங்களில் இந்தியாவிடம் தோற்றுள்ளன. இந்தியாவுக்கு எதிராக போராடி தோற்ற பாகிஸ்தான், சிறிய அணியான ஹாங்காங்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைப்போலவே ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 155 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.
Asia Cup, 2022Sharjah Cricket Stadium, Sharjah 28 January 2023
Pakistan 193/2 (20.0)
Hong Kong 38 (10.4)
Match Ended ( Day – Match 6 ) Pakistan beat Hong Kong by 155 runs
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil