worldcup 2023 | india-vs-pakistan: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நாளை வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன. போட்டிக்காக நாட்டின் 10 மைதானங்கள் தயாராக உள்ளன.
இந்நிலையில், இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அக்டோபர் 6-ம் தேதி நடக்கும் அதன் முதல் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இதன்பிறகு, அக்டோபர் 10-ம் தேதி இலங்கை அணியுடன் மோதுகிறது. தொடர்ந்து, ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் - இந்தியா அணிகளுக்கு இடையிலான போட்டி அக்டோபர் 14-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: World Cup 2023 Captains Day LIVE
பாபர் அசாம் நெகிழ்ச்சி
இந்த நிலையில், உலகக் கோப்பை தொடருக்காக இந்தியா வருகை தந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இந்திய ரசிகர்கள் அளிக்கும் வரவேற்பு குறித்து பாபர் அசாம் நெகிழ்ந்து பேசியுள்ளார். உலகக் கோப்பை 2023 போட்டிக்கு முன்னதாக 10 அணிகளின் கேப்டன்கள் பத்திரிகையாளர்களுடன் உரையாடினர்.
அப்போது பேசிய பாபர் அசாம் "நாங்கள் மிகச் சிறந்த விருந்தோம்பலைப் பெற்றோம், இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை, ஆனால் மக்கள் எங்களுக்கு பதிலளித்த விதம், எல்லோரும் அதை ரசித்தார்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் இங்கே ஐதராபாத்தில் ஒரு வாரமாக இருக்கிறோம். அதனால் நாங்கள் இந்தியாவில் இருப்பது போல் இல்லை; நாங்கள் எங்களது நாட்டில் இருப்பது போல் இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இது நன்றாக இருக்கிறது. அணியில் அனைவரும் 100% சதவீத உழைப்பை கொடுக்க இது ஒரு பொன்னான வாய்ப்பு என நான் நினைக்கிறேன்." என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“