போன வருஷம் கெத்து; இந்த வருஷம் மொத்து! - பாக்., பவுலரை வச்சு செய்யும் அந்நாட்டு ரசிகர்கள் (வீடியோ)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pakistan cricket hasan ali ramp walk trolled by pak fans - போன வருஷம் கெத்து; இந்த வருஷம் மொத்து! - பாக்., பவுலரை வச்சு செய்யும் அந்நாட்டு (வீடியோ)

pakistan cricket hasan ali ramp walk trolled by pak fans - போன வருஷம் கெத்து; இந்த வருஷம் மொத்து! - பாக்., பவுலரை வச்சு செய்யும் அந்நாட்டு (வீடியோ)

ஹசன் அலி எனும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இந்தியா தாண்டி உலகளாவிய கிரிக்கெட்டையும் அலசும் ரசிகர்களுக்கு இந்த பாக்., வேகப்பந்து வீச்சாளரை நிச்சயம் தெரியும். ஒருவேளை இப்படி அடையாளப்படுத்தினால் இவரைப் பற்றி உங்களுக்கு தெரியலாம்.

Advertisment

2018ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகாவில் கொடியிறக்கும் நிகழ்ச்சியின் போது, இந்திய பாதுகாப்பு படை வீரர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டவர் இந்த ஹசன் அலி. எல்லைக் கோட்டின் அருகே நின்று கொண்டு, கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் எடுத்தால் அவர் கொண்டாடும் ஸ்டைலைப் போன்று, இந்திய வீரர்களை நோக்கி தொடையைத் தட்டி குரளி வித்தை காட்டினார்.

இந்திய நாட்டையும், இந்திய ராணுவ வீரர்களையும் அவமதித்த அவரது இந்த செயலை பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடினர்.

Advertisment
Advertisements

இப்போது அதே பாகிஸ்தான் ரசிகர்கள், இவரை சரமாரியாக விமர்சித்து, திட்டித் தீர்த்து வருகின்றனர்.

8, 2019

இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இன்று (டிச.11) தான் முதல் போட்டி தொடங்கியது. ஆனால், விலா எலும்பில் முறிவு ஏற்பட்டு இருப்பதாக கூறி, தொடரில் இருந்து விலகினார் ஹசன் அலி.

8, 2019

காயத்தால் அவதிப்பட்டு விலகினார் என்று பார்த்தால், பாகிஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ரேம்ப் வாக் நடந்து போட்டோக்களுக்கு ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கிறார். 'இந்தாலு இன்ஜூரி-னு போனான்.. இங்க என்ன பண்ணிட்டு இருக்கான்?' என்ற மோடில் கடுப்பான பாக்., ரசிகர்கள் இவரை தாளித்து வருகின்றனர்.

இவரை எல்லாம் தயவு செய்து தேசிய அணிக்கு எடுத்து, அணியின் மானத்தை வாங்காதீர்கள் என்றும், மக்கள் இவர்களை ஹீரோவாக கொண்டாடுகிறார்கள்; ஆனால் இவர்களோ கிரிக்கெட்டில் காயம் என்று விலகிவிட்டு இங்கு ஷோ காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவரை டரியல் செய்து வருகின்றனர்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: