Advertisment

உலகக் கோப்பையில் கடைசி இடம் பிடிக்க ஏன் இந்த ட்ரைனிங்? பாக்., கிரிக்கெட் வீரர்கள் ராணுவப் பயிற்சி மீம்ஸ்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ராணுவப் பயிற்சி பெறும் வீடியோ பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதன் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட நிலையில், அதைப் பார்த்த ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.

author-image
WebDesk
New Update
Pakistan Cricket Team Army style Training Video Sparks Hilarious Memes Tamil News

ராணுவ பயிற்சி அமர்வுக்கு ஏற்பாடு செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டு இருக்கிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pakistan Cricket Team | Latest Tamil Memes | Tamil Memes2024 ஆம் ஆண்டுக்கான ஆடவர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம் நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நியூயார்க்கின் புறநகர் பகுதியில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 

Advertisment

இந்நிலையில், இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு இப்போதே பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், இது வழக்கம் போல் நடக்கும் கிரிக்கெட் பயிற்சி அல்ல. அதற்கு முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ராணுவப் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. 

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அபோதாபாத் மாவட்டம் காகுல் என்கிற பகுதியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த ராணுவ பயிற்சி அமர்வுக்கு ஏற்பாடு செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டு இருக்கிறது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ராணுவப் பயிற்சி பெறும் வீடியோ பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதன் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட நிலையில், அதைப் பார்த்த ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். இது தொடர்பான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

ராணுவ முகாமில் பயிற்சி பெறும் 29 வீரர்கள் பட்டியல்:- 

கிரிக்கெட் வீரர்களில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், சைம் அயூப், ஃபகர் ஜமான், சாஹிப்சாதா ஃபர்ஹான், ஹசீபுல்லா, சவுத் ஷகீல், உஸ்மான் கான், முகமது ஹாரிஸ், சல்மான் அலி ஆகா, அசம் கான், இப்திகார் அகமது, இர்ஃபான் கான் நியாசி, ஷதாப் கான், உஸ்மத் வாசிம், உஸ்மத் வாசிம், நவாஸ், மெஹ்ரான் மும்தாஜ், அப்ரார் அகமது, ஷாஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, முகமது அப்பாஸ் அப்ரிடி, ஹசன் அலி, முகமது அலி, ஜமான் கான், முகமது வாசிம் ஜூனியர், அமீர் ஜமால், ஹரிஸ் ரவுஃப் மற்றும் முகமது அமீர். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pakistan Latest Tamil Memes Tamil Memes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment