scorecardresearch

இங்கிலாந்திடம் பாக்,. வாஷ்-அவுட்… வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சிய ஐஸ்லாந்து!

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் தோல்வியால் நொந்துள்ள பாகிஸ்தான் அணியை மேலும் புண்படுத்தியுள்ளது ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம்.

 Pakistan cricket team trolled by Iceland Cricket Tamil News  
Iceland Cricket Brutally Troll PCB As England Heads Towards A 3-0 Clean Sweep In Test Series Tamil News

News about Pakistan, England and Iceland Cricket in tamil: பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணமாக சென்ற இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் கடந்த அக்டோபர் முதல் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 67 ரன்கள் வித்தியாசத்திலும், தொடர்ந்து கடந்த 9 ஆம் முதல் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 26 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து, கடந்த 17 ஆம் தேதி முதல் நடந்த 3-வது மற்றும் கடைசி டெஸ்ட்டில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் பாகிஸ்தான் களமாடியது.

ஆனால், இந்தப்போட்டியிலும் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. மேலும், பாகிஸ்தான் அணிக்கு சொந்த மண்ணிலே ஒயிட்-வாஷ் அடித்துள்ளது இங்கிலாந்து.

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் தோல்வியால் நொந்துள்ள பாகிஸ்தான் அணியை மேலும் புண்படுத்தியுள்ளது ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம்.

ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் சமீபத்திய ட்விட்டர் பதிவில், “நாங்கள் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3-0 என்ற கணக்கில் தோற்றபதில் மகிழ்ச்சி அடைகிறோம். சமநிலையின் நலன்களுக்காக இதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். மேலும் நாங்கள் ஒரு ஓவருக்கு 0.7 ரன்ரேட்டில் தான் விளையாடுவோம். 7.0 ரன்ரேட்டில் ஆட மாட்டோம்.” என்று பதிவிட்டுள்ளது.

ஏற்கனவே, இங்கிலாந்திடம் தோற்றதால் மனம் புண்பட்டு இருக்கும் பாகிஸ்தான் அணியினருக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் கதையாக இருக்கிறது ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் ட்விட்டர் பதிவு என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Pakistan cricket team trolled by iceland cricket tamil news

Best of Express