/tamil-ie/media/media_files/uploads/2019/11/a539.jpg)
pakistan cricketers take indian driver to dinner brisbane - இந்திய கார் டிரைவரை நெகிழ வைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் - ரசிகர்கள் வியப்பு (வீடியோ)
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி அங்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளன்று பாக்., வீரர்கள் இம்ரான் கான், நசீம் ஷா, முஹம்மத் முசா, ஷஹீன் அப்ரிடி மற்றும் யாசிர் ஷா ஆகியோர் ஹோட்டலில் இரவு உணவு சாப்பிட முடிவு செய்தனர்.
தொடர்ந்து யாசிர் ஷா வார்த்தைகளில்...
"இந்தியா அல்லது பாகிஸ்தான் ரெஸ்டாரன்ட்ஸ் பிரிஸ்பேனில் எங்கு உள்ளது என்பது எங்களுக்கு தெரியாது. ஆகையால், டாக்ஸியை அழைத்து வெளியே சென்றோம். அந்த டாக்ஸியை ஓட்டிய பாஜி ஒரு இந்தியர். அவரிடம் எங்களை ஒரு நல்ல ரெஸ்டாரன்ட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினோம். அவர் நாங்கள் யார் என்பதை கண்டறிந்துவிட்டார். பிறகு, நாங்கள் அவருடன் உருதுவில் கிரிக்கெட் பற்றி விவாதித்துக் கொண்டே சென்றோம்.
ஆனால், ரெஸ்டாரன்ட் வந்தவுடன் அவர் எங்களிடம் பணம் வாங்க மறுத்துவிட்டார். ஆகையால், அவரிடம் நாங்கள், 'ஒன்று பணம் வாங்க வேண்டும், இல்லையேல் எங்களுடன் வந்து டின்னர் சாப்பிட வேண்டும்' என்று அழைத்தோம். அதை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு எங்களுடன் வந்து உணவருந்தினார்" என்றார்.
26, 2019Yasir Shah on the incident which brought Pakistani cricketers and taxi driver together on dinner table
???? https://t.co/L47fv0CyCZ@Shah64Ypic.twitter.com/nLVxZNPPQc
— Pakistan Cricket (@TheRealPCB)
Yasir Shah on the incident which brought Pakistani cricketers and taxi driver together on dinner table
— Pakistan Cricket (@TheRealPCB) November 26, 2019
???? https://t.co/L47fv0CyCZ@Shah64Ypic.twitter.com/nLVxZNPPQc
இந்தியரிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் காட்டிய அன்பு, கிரிக்கெட் உலகில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.