Advertisment

சலோ கராச்சி... பட்டைய கிளப்பும் பாகிஸ்தான் செமி ஃபைனல் மீம்ஸ்!

பாகிஸ்தான் நாளை அதன் கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அரையிறுதிக்கு முன்னேற முதலில் பேட்டிங் செய்து 300 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை 13 ரன்னுக்கு ஆல்-அவுட் செய்ய வேண்டும்

author-image
WebDesk
New Update
Pakistan CWC 2023 semi final memes in tamil

நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட 99.9 சதவீதம் உறுதிப்படுத்தி விட்டது. இதில் மீதமுள்ள ஒரு சதவீதம் தான் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு உள்ளது.

worldcup 2023 | new-zealand-vs-sri-lanka | pakistan | tamil-memes: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் புள்ளிகள் பட்டியலில் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ள இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. 

Advertisment

மீதமுள்ள ஒரு இடத்துக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில், நேற்று நடந்த ஆட்டத்தில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட 99.9 சதவீதம் உறுதிப்படுத்தி விட்டது. இதில் மீதமுள்ள ஒரு சதவீதம் தான் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு உள்ளது.

புள்ளிகள் பட்டியலில் நியூசிலாந்து 10 புள்ளிகள், +0.743 ரன்ரேட்டுடன்  4-வது இடத்தில் வலுவாக உள்ளது. ஆனால், பாகிஸ்தான் 8 புள்ளிகள், +0.036 ரன்ரேட்டுடன் 5-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 8 புள்ளிகள், -0.338 ரன்ரேட்டுடன் 6-வது இடத்திலும் உள்ளன. 

பாகிஸ்தான் நாளை அதன் கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அந்த அணி அரையிறுதிக்கு முன்னேற முதலில் பேட்டிங் செய்து 300 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை 13 ரன்னுக்கு ஆல்-அவுட் செய்ய வேண்டும். இதேபோல், பாகிஸ்தான் 400 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்தை 112 ஆல்-அவுட் செய்ய வேண்டும். பாகிஸ்தான் 450 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்தை 162க்கு ஆல் அவுட் செய்ய வேண்டும்.

பாகிஸ்தான் 500 ரன்கள் எடுத்தால், இங்கிலாந்தை 211க்கு  ஆல் அவுட் செய்ய வேண்டும். மொத்தத்தில் இங்கிலாந்தை கிட்டத்தட்ட 273 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும். அல்லது இங்கிலாந்து அணி கொடுக்கும் இலக்கை 2.3 ஓவர்களில் அடித்து வெற்றி பெற வேண்டும். இப்படி நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.

காலாய் மீம்ஸ் 

இலங்கை அணியை வீழ்த்தி நியூசிலாந்து புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தை தக்கவைத்துள்ள நிலையில், அதனை குறிக்கும் வகையில் மீம்ஸ் போட்டுள்ளனர். 

கிண்டல் மீம்ஸ் 

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேற பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் சூப்பர் ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார். அதனை மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள். 

நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதிய நேற்றைய ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று இருந்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு அதிகரித்து இருக்கும். ஆனால், இலங்கை அணி 171 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, நியூசிலாந்து பந்துவீச்சு தாக்குப் பிடிக்க முடியாமல் சுருண்டது. இதனை கிண்டல் செய்யும் வகையில் மீம்ஸ் போட்டுள்ளனர். 

புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தை தக்கவைத்துள்ள நியூசிலாந்து, அரையிறுதிக்குள் செல்வதை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்ட நிலையில், அதனை குறிப்பிட்டு நெட்டிசன்கள் மீம்ஸ் போட்ட்டுள்ளனர். 

நடப்பு உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறும் நிலையில் பாகிஸ்தான் உள்ளதால், அதனை கலாய்த்து மீம்ஸ் போட்டுள்ளனர். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Worldcup Pakistan Tamil Memes New Zealand vs Sri Lanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment