Pakistan coach Siegfried Aikman's resignation Tamil News: பாகிஸ்தானின் ஹாக்கி அணியின் பயிற்சியாளரான சீக்பிரைட் ஐக்மேன் கடந்த 12 மாதங்களாக சம்பளம் கிடைக்காததால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஆண்டு தலைமை பயிற்சியாளராக இணைந்த ஐக்மேன் பதவியில் இருந்து அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்ததாக சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார்.
சம்பளப் பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தானில் இருந்து எய்க்மேன் தாயகம் திரும்பிய போதிலும், அவர் தனது நிலுவைத் தொகைக்காக காத்திருந்து பதவியை விட்டுக்கொடுக்கவில்லை. ஆனால் எந்த முடிவும் எட்டப்படாததால் அவர் பதவி விலக முடிவு செய்துள்ளார்.
ஐக்மேன் தனது ராஜினாமா கடிதத்தை பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பிற்கு (PHF) அனுப்பிய நேரத்தில், மற்றொரு டச்சு பயிற்சியாளர் ரோலண்ட் ஓல்ட்மன்ஸ் பாகிஸ்தானுக்கு வந்து ஞாயிற்றுக்கிழமை இரவு ஆசிய ஜூனியர் கோப்பைக்காக தேசிய ஜூனியர் அணியுடன் மஸ்கட் புறப்படுகிறார்.
ஓல்ட்மன்ஸ் லாகூருக்கு வந்து கான்டினென்டல் நிகழ்விற்கான ஜூனியர் அணிக்கு பொறுப்பேற்றார் என்பதை பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு உறுதிப்படுத்தியது. ஓல்ட்மேனின் சம்பளத்தை யார் கொடுப்பார்கள் அல்லது ஐக்மேன் நிலுவைத் தொகைகள் தீர்க்கப்படுமா என்பதை அந்த அமைப்பு குறிப்பிடவில்லை.
பாகிஸ்தான் விளையாட்டு வாரியம் (PSB) டச்சு பயிற்சியாளரின் சம்பளத்தை வழங்குவதாக கூறியதை அடுத்து, பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பால் ஐக்மேன் பணியமர்த்தப்பட்டார். தேர்தல்கள் மற்றும் அரசியலமைப்புச் சிக்கல்கள் தொடர்பாக ஹாக்கி அமைப்பு மற்றும் விளையாட்டு வாரியதிற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால், ஹாக்கி அமைப்புக்கு நிதியளிப்பதை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பு நிறுத்தும் சூழ்நிலைக்கு வழிவகுத்தது.
"நாங்கள் ஓமனுக்கு அனுப்பிய (நிதி) அணிகும் கூட தனியார் நன்கொடையாளர்கள் மற்றும் ஸ்பான்சர்கள் மூலம் பணம் திரட்டப்பட்டது" என்று பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil