பாகிஸ்தானில் விளையாட பாதுகாப்பான சூழ்நிலை இல்லை எனக் கூறி இலங்கை டி20 கேப்டன் மலிங்கா, முன்னாள் கேப்டன் மேத்யூஸ் உள்ளிட்ட முக்கிய 10 வீரர்கள் தொடரிலிருந்து விலகி உள்ளனர். இலங்கை வீரர்கள் விலகியதற்கு இந்தியா தான் காரணம் என்று பாகிஸ்தான் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு கடந்த 2009ம் ஆண்டு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது, இலங்கை அணியினர் பயணம் செய்த பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரர்கள் சிலர் காயமடைந்தனர். பாதுகாப்பு அதிகாரிகள், பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டனர். மைதானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இலங்கை வீரர்கள் மீட்கப்பட்டனர். உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்திற்கு பின்னர் பாகிஸ்தான் மீதான் நம்பகத்தன்மை முற்றிலும் கேள்விக்குறியானது. பல அணிகளும் பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்தன.
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் செப்டம்பர் 27 தொடங்கி, அக்டோபர் 9 வரை 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாட திட்டமிடப்பட்டது.
ஆனால், இதில் இலங்கை கேப்டன் மலிங்கா, ஏஞ்சலா மேத்யூஸ் உள்ளிட்ட 10 வீரர்கள் இத்தொடரில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துள்ளனர்.
நிரோஷன் டிக்வெல்லா, குஷல் பெரேரா, தனஞ்செயா டி சில்வா, திசாரா பெரேரா, அகிலா தனஞ்செயா, சுரங்கா லக்மல், தினேஷ் சந்திமல், கருணரத்னே, லசித் மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகிய வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்திருந்த நிலையில், இந்த விவகாரம் பாகிஸ்தானில் அரசியல் ரீதியிலான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
Informed sports commentators told me that India threatened SL players that they ll be ousted from IPL if they don’t refuse Pak visit, this is really cheap tactic, jingoism from sports to space is something we must condemn, really cheap on the part of Indian sports authorities
— Ch Fawad Hussain (@fawadchaudhry) September 10, 2019
இதுகுறித்து பாகிஸ்தான் அமைச்சர் ஃபாவத் ஹுசைன் தனது ட்விட்டரில், "எனக்கு கிடைத்துள்ள தகவலின்படி, பாகிஸ்தானுக்கு செல்லும் இலங்கை வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என இலங்கை வீரர்களை இந்தியா மிரட்டியுள்ளது. இந்தியாவின் விளையாட்டுத்துறையினரின் இது போன்ற செயல் மிகவும் கீழ்த்தரமானது, விண்வெளித்துறை முதல் விளையாட்டுத்துறை வரை பாகிஸ்தானுடன் இந்தியா மல்லுக்கட்டி வருகிறது, இது கண்டிக்கத்தக்கது" என குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில், இலங்கை வீரர்கள் பெரியளவில் ஏலத்திலேயே எடுக்கப்படுவதில்லை என்பது பாகிஸ்தான் அமைச்சருக்கு தெரியுமா என்று தெரியவில்லை. பாகிஸ்தானில் விளையாட மறுத்துள்ள வீரர்களில் கூட மலிங்காவைத் தவிர வேறு எவரும் கடந்த 2019 ஐபிஎல் சீசனில் கூட விளையாடவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.