இந்தியாவின்றி ஆசிய கோப்பை சாத்தியமில்லை என்பதை பி.சி.சி.ஐ. அறிந்திருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் பெரும்பாலான ஸ்பான்சர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். மேலும், அதிக வருவாய் ஈட்டித் தரும் இந்தியா-பாக்., போட்டி இல்லாமல் ஆசிய கோப்பை ஒளிபரப்பாளர்களுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தாது.
2024-ல், ஆசிய கோப்பை ஒளிபரப்பு உரிமையை சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா (SPNI) அடுத்த 8 ஆண்டுகளுக்கு 170 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கைப்பற்றியது. இந்தத் தொடர் நடைபெறாவிட்டால், ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.
ஏ.சி.சி-யின் 5 முழு உறுப்பினர்களான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு ஒளிபரப்பு வருவாயில் இருந்து தலா 15% கிடைக்கும், மீதமுள்ள தொகை இணை மற்றும் துணை உறுப்பினர்களுக்கு தரப்படும். 2023-ல் நடைபெற்ற கடைசி ஆசிய கோப்பை தொடரும் இந்தியா-பாக்., சூழ்நிலையால் பாதிக்கப்பட்டது. பாகிஸ்தான் தொடரை நடத்தியதால், இந்தியா எல்லை தாண்டிச் செல்ல மறுத்தது. இந்தியா தனது போட்டிகளை இலங்கையில் விளையாடுவதை பி.சி.சி.ஐ. உறுதி செய்தது. பாக்., இறுதிப்போட்டிக்கு முன்னேற தவறியதாலும், கொழும்பில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை இந்தியா வென்றதாலும், பிசிபிக்கு தொடர் ஏமாற்றமாக அமைந்தது.
2024-ல் பாகிஸ்தானால் நடத்தப்பட்ட ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியிலும் இதே நிலை மீண்டும் நிகழ்ந்தது. இந்தியா மீண்டும் துபாயில் தனது போட்டிகளை விளையாடியது. இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறி கோப்பையை வென்றதால், பாகிஸ்தானுக்கு இறுதிப் போட்டியை நடத்தும் வாய்ப்பு பறிபோனது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) உலகளாவிய அமைப்பாக இருந்தாலும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி) 1983 துணைக்கண்டத்தில் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கும், உலக கிரிக்கெட்டில் ஒரு சக்திவாய்ந்த ஆசிய அணியை உருவாக்குவதற்கும் நிறுவப்பட்டது. முன்னதாக, ஜெய் ஷா கடந்த ஆண்டு ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு ஏசிசி தலைவராக இருந்தார்.