Advertisment

'தர்பூசணி பழம் மாதிரி இருக்கு'… பாக்., டி20 உலகக் கோப்பை ஜெர்ஸியை கலாய்த்து தள்ளிய முன்னாள் வீரர்

Ex-spinner trolls Pakistan's new T20 World Cup kit, says it 'Looks like watermelon' Tamil News: பாகிஸ்தானின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் ஜெர்ஸி 'தர்பூசணி பழம்' போல் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Pakistan spinner Danish Kaneria talks about pak’s T20 World Cup kit

Ex-spinner trolls Pakistan's new T20 World Cup kit, calls ‘inspired by Fruit Ninja’ Tamil News

T20 World Cup 2022: Ex-Pakistan star relates team's new jersey to 'watermelon' Tamil News: 8 - வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கவுள்ள இந்தத்தொடரில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கின்றன.

Advertisment

இந்த தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அதன் முதல் போட்டியில் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி இந்திய அணியுடன் மோதுகிறது. இப்போட்டி ஆஸ்திரேலியவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. வழக்கம் போல் இந்த போட்டிக்கு இருநாட்டு மற்றும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அதன் புதிய ஜெர்ஸியை நேற்று முன்தினம் அறிமுகம் செய்தது. இந்த ஜெர்ஸி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், முன்னாள் வீரர்கள் மத்தியில் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

publive-image

இந்த நிலையில், இந்த ஜெர்ஸி குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ள பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் ஜெர்ஸி 'தர்பூசணி பழம்' போல் இருக்கிறது என்றும், அதில் இருக்கும் டிசைன் பிரபல மொபைல் கேம்மான "ஃப்ரூட் நிஞ்ஜா"-வில் இருந்து ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

publive-image

கனேரியா தனது யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட வீடியோவில் "பாகிஸ்தானின் டி20 உலகக் கோப்பை ஜெர்சி ஒரு தர்பூசணி போல் தெரிகிறது. ஃப்ரூட் நிஞ்ஜா கேம் விளையாடும்போது அவர்களுக்கு உத்வேகம் கிடைத்ததாகத் தெரிகிறது. அந்த ஜெர்ஸிக்கு பதிலாக சரியான அடர் பச்சை நிறத்தை தேர்வு செய்திருக்கலாம். இது நீங்கள் ஒரு பழக் கடையில் நிற்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது." என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Sports Cricket India Vs Pakistan Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment