Advertisment

PAK vs AFG: பேட்டிங், பவுலிங்கில் அசத்திய ஆப்கான்; பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி

ஷபீக், பாபர் அசம் அரை சதத்தால் 282 ரன்கள் சேர்த்த பாகிஸ்தான்; பேட்டிங்கில் அசத்திய ஆப்கானிஸ்தான்; 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

author-image
WebDesk
New Update
PAK vs AFG

Pakistan vs Afghanistan World Cup 2023 Live Score:

Pakistan vs Afghanistan World Cup 2023Score: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 22-வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகின்றன.  2 மணிக்கு தொடங்கும் இந்த இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Pakistan vs Afghanistan Live Score, World Cup 2023: Babar Azam wins the toss, Shadab Khan returns

பாகிஸ்தான் அணி, நெதர்லாந்து மற்றும் இலங்கைக்கு எதிராக பெரும் வெற்றி பெற்ற நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் தோல்வியடைந்தது. தொடர் தோல்விகள் பாகிஸ்தானை நெருக்கடி நிலைக்கு தள்ளியுள்ளது. பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் மோதுகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்பதால், ஆப்கானிஸ்தான் அணி பாபர் ஆசம் அணிக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணி இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாக் அவுட் சுற்றுக்கு செல்ல செல்ல மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். 

ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்:

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(சி), அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ராம் அலிகில்(வ), முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், நூர்அஹ்

பாகிஸ்தான் அணி வீரர்கள்:

அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம்(சி), முகமது ரிஸ்வான்(டபிள்யூ), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், உசாமா மிர், ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி, ஹாரிஸ் ரவுஃப்

Pakistan vs Afganistan Match Updates:

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 22-வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகின்றன. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அப்துல்லா ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் பேட்டிங் செய்ய களம் இறங்கினர்.

அப்துல்லா ஷஃபிக் அடித்து விளையாட இமாம் உல் ஹக் நிதானமாக விளையாடினார். 

பாகிஸ்தான் அணி 10.1 ஓவரில் 56 ரன் எடுத்திருந்தபோது, இமாம் உல் ஹக் 22 பந்தில் 17 ரன் எடுத்திருந்த நிலையில், அசமதுல்லா ஒமர்ஜாய் பந்தில் நவீன் உல் ஹக் இடம் கேட்ச் கொடுட்து அவுட் ஆனார். இதையடுத்து,  பாபர் ஆசம் பேட்டிங் செய்ய வந்தார்.

சிறப்பாக விளையாடிய அப்துல்லா ஷஃபிக் அரைசதம் அடித்தார். பாகிஸ்தான் அணி 22.3 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 110 ரன் எடுத்திருந்தபோது, 75 பந்துகளில் 58 ரன் அடித்திருந்த ஷஃபிக் நூர் அஹமது பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். இவரை அடுத்து, முஹம்மது ரிஸ்வான் பேட்டிங் செய்ய வந்தார். 

முஹம்மது ரிஸ்வான் 8 ரன் எடுத்து, நூர் அஹமது பந்தில் முஜீப் உர் ரஹ்மான் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வந்த வேகத்திலேயே வெளியேறினார். அடுத்து, சாத் ஷகீல் பேட்டிங் செய்ய வந்தார். 

நிதானமாக விளையாடிய ஷகீல் 34 பந்துகளில் 25 ரன் எடுத்திருந்த நிலையில், முஹம்மது நபி பந்தில் ரஷீத் கான் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ஷதாப் கான் பேட்டிங் செய்ய வந்தார்.

மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய பாபர் ஆசம், அரைசதம் அடித்தார். மறுமுனையில் ஆடிய ஷதாப் கான் அதிரடியாக ஆடினார். சிறப்பாக ஆடிவந்த பாபர் அசம் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து இப்திகார் அகமது களமிறங்கி, சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசினார். இப்திகார் 27 பந்துகளில் 40 ரன்கள் அடித்து அவுட் ஆனார். இதில் 4 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கும்.

அடுத்து ஷாகீன் அப்ரிடி களமிறங்கி 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி பந்தில் ஷதாப் கான் ஆட்டமிழந்தார். ஷதாப் கான் 38 பந்துகளில் 40 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து பாகிஸ்தான் தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நூர் அகமது 3 விக்கெட்களையும், நவீன் உல் ஹக் 2 விக்கெட்களையும், நபி மற்றும் ஒமர்சாய் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஆப்கானிஸ்தான் பேட்டிங்

ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராகிம் சத்ரன் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். இருவரையும் பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் பவுலர்கள் திணறினர். ஆப்கானிஸ்தான் அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடி இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். விக்கெட் வீழ்த்த பாகிஸ்தான் பவுலர்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 128 ரன்கள் எடுத்தது.

சிறப்பாக ஆடி வந்த குர்பாஸ் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கும். முதல் விக்கெட்க்கு குர்பாஸ் – சத்ரன் ஜோடி 130 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து ரஹ்மத் ஷா களமிறங்கி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சத்ரன் – ரஹ்மத் ஜோடி 60 ரன்கள் சேர்த்தது. சத்ரன் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஹஸ்மத்துல்லா ஷாகிதி களமிறங்கினார். ஆப்கானிஸ்தான் அணி 35 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது.

மறுமுனையில் சிறப்பாக ஆடிய ரஹ்மத் ஷா அரை சதம் அடித்தார். தொடர்ந்து இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்து வந்தனர். ஷாகிதி 48 ரன்கள் எடுத்திருந்தப்போது ஆப்கானிஸ்தான் அணி வெற்றி இலக்கை அடைந்தது. ரஹ்மத் 77 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி மற்றும் ஹசன் அலி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Worldcup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment