இறுதிவரை திக்.. திக்... பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா : இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதல்

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது அரைஇறுதிப் போட்டி தென் ஆப்பிரிக்காவின் வில்லோமூர் பார்க்கில் நடைபெற்றது.

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது அரைஇறுதிப் போட்டி தென் ஆப்பிரிக்காவின் வில்லோமூர் பார்க்கில் நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
Pakistan vs Australia Semi Final Live U19 World Cup 2024 in tamil

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் மோதல்

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

Pakistan vs Australia Semi-Final Live, U19 ICC World Cup 2024: ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி 15-வது ஜூனியர் உலகக் கோப்பை போட்டி (50 ஓவர்) தென்ஆப்பிரிக்காவில் உள்ள புளோம்பாண்டீன், போட்செப்ஸ்ட்ரூம், கிம்பெர்லி, ஈஸ்ட் லண்டன், பெனோனி ஆகிய நகரங்களில் கடந்த 19ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

லீக் சுற்று 

Advertisment

இந்நிலையில், நடப்பு ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, வங்கதேசம், அயர்லாந்து, அமெரிக்கா, 'பி' பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, 'சி' பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, நமிபியா, 'டி' பிரிவில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் இடம் பெற்றன. 

சூப்பர் 6 சுற்று

இதில், ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதின. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் வீதம் மொத்தம் 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. சூப்பர் 6 சுற்றுக்கு வரும் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1ல் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து, நேபாளம், அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் 2ல் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் இடம் பிடித்தன. 

சூப்பர் 6 சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். 

இந்தியாவுடன் மோதப் போவது யார்? 

Advertisment
Advertisements

அந்த வகையில், அரைஇறுதிப் போட்டிக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஜூனியர் அணிகள் முன்னேறியுள்ளன. முதல் அரைஇறுதியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஜூனியர் அணிகள் மோதிய நிலையில், இந்திய ஜூனியர் அணி அபார வெற்றி பெற்றது. 2வது அரைஇறுதியில் மோதும் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் ஜூனியர் அணிகளில் வெற்றியை ருசிக்கும் அணி, பிப்ரவரி 11ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்தும். 

2வது அரைஇறுதிப் போட்டி - ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் ஜூனியர் அணிகள் மோதல் 

இந்நிலையில், ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது அரைஇறுதிப் போட்டி தென் ஆப்பிரிக்காவின் பெனோனி நகரில் உள்ள வில்லோமூர் பார்க்கில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 

டாஸ் வென்ற ஆஸி., ஜூனியர் பவுலிங் 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஜூனியர் அணியின் கேப்டன் ஹக் வெய்ப்ஜென் பவுலிங் செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் ஜூனியர் அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 179 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அரைசதம் அடித்த அசான் அவாய்ஸ் 52 ரன்களும், அராபத் மின்ஹாஸ் 52 ரன்களும் எடுத்தனர்.  மிகச்சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய ஜூனியர் அணியில் டாம் ஸ்ட்ரேக்கர் 6 விக்கெட்டையும், மஹ்லி பியர்ட்மேன், கேலம் விட்லர், ராஃப் மேக்மில்லன், டாம் காம்ப்பெல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

தொடர்ந்து 180 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தொடக்கத்திலேயே விக்கெட் சரிவை சந்தித்தது. தொடக்க வீரர் சாம் கோன்ஸ்டாஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த கேப்டன் வெயிப்கன் 4 ரன்களுக்கும், ஹர்ஜாஸ் சிங் 5 ரன்களுக்கும், விக்கெட் கீப்பர் ரியான் ரன்கணக்கை தொடங்காமலும் வெளியேறினர்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமனையில் சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் ஹேரி டிக்டசன் அரைசதம் கடந்த நிலையில், 75 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஒலிபர் பீக்கே 49 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாம்பெல் 25 ரன்களுக்கு வீழந்த நிலையில், டாம் ஸ்டார்கர் 3, பிரீட்மேன் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் ஆஸ்திரேலியா அணி 164 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், கடைசிவிக்கெட்டுக்கு இணைந்த ராஃப் மேக்மிலன் பொறுப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். 49.1 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இணைந்த ராஃப் மேக்மிலன் 19 ரன்களுடனும், விட்லிர் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள ஆஸ்திரேலியா அணி, வரும் 11-ந் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்திய இளைஞர் அணியுடன் மோதுகிறது.

ஆஸ்திரேலியா ஜூனியர் அணி: ஹாரி டிக்சன், சாம் கான்ஸ்டாஸ், ஹக் வெய்ப்ஜென் (கேப்டன்), ஹர்ஜாஸ் சிங், ரியான் ஹிக்ஸ் (விக்கெட் கீப்பர்), டாம் காம்ப்பெல், ஆலிவர் பீக், ராஃப் மேக்மில்லன், டாம் ஸ்ட்ரேக்கர், மஹ்லி பியர்ட்மேன், கேலம் விட்லர். 

பாகிஸ்தான் ஜூனியர் அணி: ஷாமில் ஹுசைன், ஷாஜாய்ப் கான், அசான் அவாய்ஸ், சாத் பைக் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), அஹ்மத் ஹசன், ஹாரூன் அர்ஷாத், அராபத் மின்ஹாஸ், நவீத் அகமது கான், உபைத் ஷா, முகமது ஜீஷன், அலி ராசா.

ஆங்கிலத்தில் படிக்கவும்: Pakistan vs Australia Semi-Final Live, U19 World Cup 2024

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Australia vs Pakistan U19 ICC World Cup

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: