Advertisment

ஷஃபீக், ஜமாம் அரைசதம்; வங்கதேசத்தை எளிதாக வீழ்த்திய பாகிஸ்தான்

பாகிஸ்தானின் சிறப்பான பந்துவீச்சால் 204 ரன்கள் மட்டுமே எடுத்த வங்கதேசம்; ஷஃபீக், ஜமாம் அரைசதத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி

author-image
WebDesk
New Update
Pakistan vs Bangladesh Live Score updates World Cup 2023  Kolkata in tamil

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதல்

worldcup 2023 | Pakistan vs Bangladesh: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் 31-வது லீக் ஆட்டத்தில் பாபர் அசாம் தலைமையலான பாகிஸ்தான் மற்றும் ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Pakistan vs Bangladesh Live Score, World Cup 2023

டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, பேட்டிங் செய்ய வந்த வங்கதேச அணியில் தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ் - தன்சித் ஹசன் ஜோடி களமிறங்கினர். இதில் தன்சித் ஹசன் டக்-அவுட் ஆகி நடையைக் கட்டினார். அடுத்து வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டி 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

பின்னர் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் உடன் ஜோடி சேர்ந்த முஷ்பிகுர் ரஹீம் ஒரு பவுண்டரியை விரட்டி 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். களத்தில் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து வந்த லிட்டன் தாஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 6 பவுண்டரிகளை விளாசிய அவர் 46 ரன்னுக்கு அவுட் ஆனார். அவருடன் மறுமுனையில் சிறப்பான ஜோடி அமைத்து அரைசதம் அடித்த  மஹ்முதுல்லா 56 ரன்னில் ஆட்டமிழந்தார். 

அவரைத் தொடர்ந்து வந்த வீரரான தவ்ஹித் ஹிரிடோய் ஒரு சிக்ஸரை மட்டும் பறக்கவிட்டு 7 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்ததாக கேப்டன் ஷாகிப் அல் ஹசன் - மெஹிதி ஹசன் மிராஸ் ஜோடி சேர்ந்தனர். வங்கதேச அணி 38 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. 

சிறிது நேரத்தில் ஷகிப் 43 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக தஸ்கின் அகமது களமிறங்கினார். மறுமுனையில் ஆடி வந்த மெஹிதி 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து முஸ்தாபிஷூர் களமிறங்கிய நிலையில், தஸ்கின் 6 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக இஸ்லாம் களமிறங்கி 1 ரன் எடுத்த நிலையில், முஸ்தாபிஷூர் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து வங்கதேசத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. வங்கதேசம் அணி 45.1 ஓவர்களில் 10 விக்கெட்களையும் இழந்து 204 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிதி மற்றும் முகமது வாசிம் ஜூனியர் தலா 3 விக்கெட்களையும், ஹரிஸ் ரவுஃப் 2 விக்கெட்களையும், இப்திகார் அகமது மற்றும் உசாமா மிர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பாகிஸ்தான் பேட்டிங்

பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷஃபீக் மற்றும் ஜமாம் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்தில் நிதானம் காட்டினாலும், ஜமாம் பின்னர் அதிரடியில் இறங்கினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஷஃபீக் அரை சதம் விளாசினார். இருவரையும் வீழ்த்த முடியாமல் வங்கதேச பவுலர்கள் திணறினர்.

அடுத்ததாக 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சருடன் ஜமாமும் அரைசதம் விளாசினார். இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் எடுத்தது. ஷஃபீக் 66 ரன்களுடனும், ஜமாம் 56 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

சிறிது நேரத்தில் ஷஃபீக் 68 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு ஷஃபீக் – ஜமாம் ஜோடி 128 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பாபர் அசம் 9 ரன்களில் வெளியேறினார்.

இதனையடுத்து ரிஸ்வான் களமிறங்கினார். மறுமுனையில் அதிரடியாக ஆடி வந்த ஜமாம் 74 பந்துகளில் 81 ரன்கள் அடித்து அவுட் ஆனார். இதில் 7 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும். இதனையடுத்து இப்திகார் அகமது களமிறங்கினார். ரிஸ்வான் – அகமது ஜோடி பொறுப்பாக விளையாடி வெற்றி இலக்கை கடந்தது.

பாகிஸ்தான் அணி 32.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரிஸ்வான் 26 ரன்களுடனும், அகமது 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. வங்கதேசம் தரப்பில் மெஹிடி ஹசன் 3 விக்கெட்களையும் வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் புள்ளி பட்டியலில் 5 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இரு அணிகளின் பிளேயிங் லெவன்  வீரர்கள்:- 

வங்கதேசம்: லிட்டன் தாஸ், தன்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா, தவ்ஹித் ஹிரிடோய், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம். 

பாகிஸ்தான்: அப்துல்லா ஷபீக், ஃபகர் ஜமான், பாபர் ஆசம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஆகா சல்மான், ஷாஹீன் அப்ரிடி, உசாமா மிர், முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ரவுஃப் 

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அதன் முதல் 2 லீக் ஆட்டங்களில் நெதர்லாந்து, இலங்கை அணிகளை தோற்கடித்து நல்ல தொடக்கம் கண்டது .ஆனால் அதன் பிறகு அந்த அணி இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் வரிசையாக தோல்வி கண்டது. பாகிஸ்தான் இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அரைஇறுதி வாய்ப்பு சிக்கலாகி விடும். எனவே இது பாகிஸ்தான் அணிக்கு மிகவும் முக்கியமான ஆட்டமாக பார்க்கப்படுகிறது. 

இதேபோல் தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்த வங்கதேச அணி அதன் பிறகு இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய பலமான அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியடைந்தது. அடுத்த சுற்று வாய்ப்பை எற்கனவே பறிகொடுத்து விட்ட அந்த அணி இனிமேல் இழக்க எதுவுமில்லை என்ற நிலையில் உள்ளது. அதனால் வங்கதேசம் வரும் ஆட்டங்களில் எதிரணிக்கு அதிர்ச்சி அளிக்க தீவிரம் காட்டும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

நேருக்கு நேர் 

பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் சர்வதேச ஒருநாள் போட்டியில் இதுவரை 38 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 33 ஆட்டங்களில் பாகிஸ்தானும், 5 ஆட்டங்களில் வங்காளதேசமும் வென்று இருக்கின்றன. உலகக் கோப்பையில் இரண்டு முறை மோதியதில் தலா ஒரு வெற்றி கண்டுள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Worldcup Pakistan vs Bangladesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment