Advertisment

Asia Cup 2023, PAK vs NEP: 104 ரன்களில் சுருண்ட நேபாளம்; 238 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி

பாபர் அசம், அகமது அதிரடி சதத்தால் 342 ரன்கள் குவித்த பாகிஸ்தான்; 104 ரன்களுக்குள் சுருண்ட நேபாளம்; 238 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pakistan vs Nepal Live Score, Asia Cup 2023 in tamil

ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் இன்று மோதல்

Pakistan vs Nepal Asia Cup 2023 Score Tamil News: 16வது ஆசிய கோப்பை தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

Advertisment

இந்த 6 அணிகளும் 3 அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும். குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகளும், குரூப் பி-யில் இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோத உள்ளன. பாகிஸ்தானின் முல்தான் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 3 மணி அளவில் ஆட்டம் தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:-

பாகிஸ்தான்:

ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப்

நேபாளம்:

குஷால் புர்டெல், ஆசிப் ஷேக் (விக்கெட் கீப்பர்), ரோஹித் பௌடெல் (கேப்டன்), ஆரிப் ஷேக், குஷால் மல்லா, திபேந்திர சிங் ஐரி, குல்சன் ஜா, சோம்பால் கமி, கரண் KC, சந்தீப் லாமிச்சானே, லலித் ராஜ்பன்ஷி

பாகிஸ்தான் பேட்டிங்

பாகிஸ்தான் அணியில் ஃபகார் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஃபகார் ஜாமன் 14 ரன்களில் அவுட் ஆக பாபர் அசம் களமிறங்கினார். சிறிது நேரத்திலே இமாம் உல் ஹக் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் முகமது ரிஸ்வான் களமிறங்கினார். பாபர் மற்றும் ரிஸ்வான் ஜோடி சிறப்பாக ஆடி ரன் குவித்தது. அருமையாக ஆடிய பாபர் அரை சதம் அடித்தார். நன்றாக ஆடி வந்த ரிஸ்வான் 44 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய சல்மான் 5 ரன்களில் அவுட் ஆனார்.

இதனையடுத்து பாபருடன் இப்திகார் அகமது ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். பாபர் சதம் அடித்து அசத்தினார். அதிரடியாக ஆடிய ரிஸ்வானும் சதம் அடித்தார். இரண்டு பந்துகள் மீதம் இருந்த நிலையில் பாபர் 151 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய சதாப் கான் 4 ரன் அடித்தார். அகமது 71 பந்துகளில் 109 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் சேர்த்தது. நேபாள அணியில் சோம்பால் 2 விக்கெட்களையும், கரண் மற்றும் சந்தீப் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

நேபாளம் பேட்டிங்

நேபாள அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக குஷல் மற்றும் ஆசிப் களமிறங்கினர். குஷல் 8 ரன்களிலும், ஆசிப் 5 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்து களமிறங்கிய ரோகித் டக் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஆரிப் மற்றும் சோம்பால் இருவரும் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடினார். இருப்பினும் ஆரிப் 26 ரன்களிலும், சோம்பால் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த குல்சன் 13 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கியவர்கள் ஒற்றை இலக்கங்களில் அவுட் ஆகினார்.

இதனால் நேபாளம் அணி 23.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் தரப்பில், ஷதாப் கான் 4 விக்கெட்களையும், ஷாகீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் தலா 2 விக்கெட்களையும், நசீம் மற்றும் நவாஸ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Cricket Pakistan Asia Nepal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment