/indian-express-tamil/media/media_files/JCdc9zNKMYnaZ1xu9EAq.jpg)
வருகிற வெள்ளிக்கிழமை பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் 18வது போட்டியில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவுடன் மல்லுக்கட்டுகிறது.
worldcup 2023 | india-vs-bangladesh:13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நாளை (வியாழக்கிழமை) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் அரங்கேறும் 17வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டிக்காக இந்திய அணி தீவிர பயிர்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நாளை நடக்கும் போட்டியில் வங்கதேசம் இந்தியாவை வீழ்த்தினால் வங்கதேச கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் டின்னர் சாப்பிட வருவதாக பாகிஸ்தான் நடிகை ஒருவர் தைரியமான வாக்குறுதியை கொடுத்துள்ளார்.
சேஹர் ஷின்வாரி என்ற அந்த நடிகை தனது எக்ஸ் வலைதள பதிவில், "இன்ஷாஅல்லாஹ் என் பெங்காலி பாண்டு அடுத்த போட்டியில் எங்களைப் பழிவாங்குவார். அவர்களது அணி இந்தியாவை வென்றால், பெங்காலி பையனுடன் மீன் விருந்து சாப்பிட நான் டாக்காவுக்குச் செல்வேன்" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
InshAllah my Bangali Bandu will avenge us in the next match. I will go to dhaka and have a fish dinner date with Bangali boy if their team managed to beat India ✌️❤️ 🇧🇩
— Sehar Shinwari (@SeharShinwari) October 15, 2023
கடந்த சனிக்கிழமை அகமதாபாத்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவின் வீழ்ந்தது. இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2ல் வென்றுள்ள பாகிஸ்தான் புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. வருகிற வெள்ளிக்கிழமை பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் 18வது போட்டியில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவுடன் மல்லுக்கட்டுகிறது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.