Advertisment

டோக்கியோவில் தங்கம்... நொறுங்கிப் போன பாரிஸ் கனவு: இந்திய பாராலிம்பிக் சாம்பியன் வீரர் திடீர் சஸ்பெண்ட்

டோக்கியோ 2020 பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய சாம்பியன் வீரர் பிரமோத் பஹத், 18 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதாக உலக பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Paralympic champion Pramod Bhagat suspended for 18 months to miss the Paris 2024 Paralympic Games Tamil News

2024 ஆம் ஆண்டு தாய்லாந்தின் பட்டாயாவில் நடந்த பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்தின் டேனியல் பெத்தேலை கடினமான இறுதிப் போட்டியில் தோற்கடித்ததன் மூலம் பிரமோத் பஹத் தனது ஆடவர் ஒற்றையர் எஸ்.எல் 3 பட்டத்தை தக்கவைத்தார்.

டோக்கியோ 2020 பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய சாம்பியன் வீரர் பிரமோத் பஹத், 18 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதாக உலக பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது. பிரமோத் பஹத் ஊக்க மருந்து தடுப்பு நெறிமுறைகளை மீறியதால் சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக கூறியுள்ளது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Paralympic champion Pramod Bhagat suspended for 18 months, to miss the Paris 2024 Paralympic Games

இந்த இடைநீக்கம் காரணமாக பிரமோத் பஹத் வருகிற 28 ஆம் தேதி முதல் பிரான்சின் பாரிஸ் நகரில் தொடங்கும் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க முயாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இது தொடர்பாக சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டோக்கியோ 2020 பாராலிம்பிக் சாம்பியன் பிரமோத் பகத் 18 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதனால், பாரிஸ் 2024 பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியாது. 

மார்ச் 1, 2024 அன்று, விளையாட்டு நடுவர் நீதிமன்றம் (சி.ஏ.எஸ்) ஊக்கமருந்து எதிர்ப்புப் பிரிவு, பிரமோத் பஹத் பேட்மிண்டன் சம்மேளனத்தின் ஊக்கமருந்து எதிர்ப்பு விதிமுறைகளை மீறி 12 மாதங்களுக்குள் மூன்று தோல்விகளை எதிர்கொண்டதாக கண்டறிந்தது. 29 ஜூலை 2024 அன்று, விளையாட்டு நடுவர் நீதிமன்றம் முன்பு அவர் மேல்முறையீடு செய்தார். ஆனால், அந்த மேல்முறையீட்டை விளையாட்டு நடுவர் நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், விளையாட்டு நடுவர் நீதிமன்றம் 1 மார்ச் 2024 அன்று ஊக்கமருந்து எதிர்ப்புப் பிரிவு முடிவை உறுதி செய்தது. எனவே, அவரது தகுதியற்ற காலம் இப்போது நடைமுறையில் உள்ளது." என்று  அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, 2024 ஆம் ஆண்டு தாய்லாந்தின் பட்டாயாவில் நடந்த பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்தின் டேனியல் பெத்தேலை கடினமான இறுதிப் போட்டியில் தோற்கடித்ததன் மூலம் பிரமோத் பஹத் தனது ஆடவர் ஒற்றையர் எஸ்.எல் 3 பட்டத்தை தக்கவைத்தார்.  35 வயதான பிரமோத் பஹத் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்த போட்டியில் 14-21, 21-15, 21-15 என்ற கணக்கில் தனது பரம எதிரியை வீழ்த்தினார்.

பிரமோத் பஹத் திற்கு இது பகத்தின் நான்காவது ஒற்றையர் உலகப் பட்டமாகும். அவர் இதற்கு முன்பு 2015, 2019 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் இதே பதக்கத்தை மூன்று முறை வென்றுள்ளார். 2013 பதிப்பில் இருந்து உலகளாவிய சாம்பியன்ஷிப்பில் ஆடவர் இரட்டையர் தங்கத்தையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Paris 2024 Olympics Badminton Paralympics
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment