Mariyappan Thangavelu Tamil News: மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் 2020 போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை நடந்த இந்திய போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர் முன்னதாக 2016ம் ஆண்டு நடைபெற்ற ரியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி சாதனை புரிந்தார்.

ஜப்பான் பாராலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த பிறகு சென்னை திரும்பிய மாரியப்பன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின், தனக்கு அரசாங்க வேலை வழங்கவேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.

மாரியப்பன் தங்கவேலுவுக்கு தற்போது தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் துணைமேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“