33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக்கின் 32 விளையாட்டுகளில் சுமார் 10,500 விளையாட்டு வீரர்கள் 329 பதக்க நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 - தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் விலை
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 2 பதக்கங்களை வென்றுள்ளது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்றார். இதேபோல், துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் - மனு பாக்கர் இணை வெண்கல பதக்கம் வென்று அசத்தினர்.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 - தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் விலை
இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் 2024 போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் பற்றியும், அவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள உலோகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்தும் இங்கு பார்க்கலாம்.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 - தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் விலை
ஒலிம்பிக் போட்டிகளில் வழங்கப்படும் பதக்கங்களின் வடிவமைப்பிற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி சில விதிகளை வகுத்துள்ளது. தரநிலைகளின்படி, தங்கப் பதக்கத்திற்கு பெரும்பாலும் 92.5% தூய்மையான வெள்ளியை பயன்படுத்தியிருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 6 கிராம் தங்கத்தால் மூலாம் பூசப்பட்டிருக்க வேண்டும். அதாவது கிட்டத்தட்ட முக்கால் சவரன் தங்கம் இருக்க வேண்டும்.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 - தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் விலை
அந்த வகையில், பாரிஸ் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் 529 கிராம் எடை கொண்டது. அதாவது அரை கிலோவுக்கு மேல் எடையுள்ளதாக இருக்கும். அதில், 95.4% -க்கும் அதிகமாக வெள்ளி (505 கிராம்) சேர்க்கப்பட்டுள்ளது. வெறும் 6 கிராம் தூய தங்கம் தான் சேர்க்கப்பட்டுள்ளது. அதை பதக்கத்தின் மீது முலாம் பூச பயன்படுத்தியுள்ளனர். இந்தப் பதக்கங்களில் 18 கிராம் இரும்பைச் சேர்த்துள்ளதாக பல்வேறு செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதுவும் பாரிஸ் ஈபிள் டவர் செய்யப்பட்டுள்ள இரும்பில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 - தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் விலை
தங்கப் பதக்கம் தூய தங்கத்தால் ஆனது என்றால், அதன் மதிப்பு தோராயமாக 41,161.50 டாலராக இருக்கும். இதனாலேயே கடைசியாக 1912 ஆம் ஆண்டில் ஸ்வீடனில் ஸ்டாக்ஹோமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் மட்டுமே தூய தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் வழங்கப்படும் தங்கப் பதக்கத்தின் விலை தோராயமாக 758 டாலர் அல்லது சுமார் 63,501.72 ரூபாய் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 - தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் விலை
ஒலிம்பிக் போட்டிகளில் வழங்கப்படும் வெள்ளிப் பதக்கம் பெரும்பாலும் வெள்ளியால் ஆனது. அதேபோல், வெண்கலப் பதக்கம், செம்பு, இரும்பு மற்றும் துத்தநாக கலவையால் செய்யப்பட்டதாகும்.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 - தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் விலை
வெள்ளிப் பதக்கம் 525 கிராம் எடை கொண்டது. அதில் 507 கிராம் வெள்ளியும், 18 கிராம் இரும்பும் சேர்க்கப்பட்டுள்ளது. வெள்ளி மற்றும் இரும்புக்கான ஜூலை 24 வெள்ளி புள்ளி விலையின் அடிப்படையில் அதன் மதிப்பு தோராயமாக 486 டாலர் ஆகும். இந்திய ரூபாயில் ரூ.40,690.71 ஆக இருக்கும்.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 - தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் விலை
455 கிராம் எடையுள்ள வெண்கலப் பதக்கத்தில் 415.15 கிராம் தாமிரம், 21.85 கிராம் துத்தநாகம் மற்றும் 18 கிராம் இரும்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதன் மதிப்பு தோராயமாக 13 டாலர் ஆகும். இந்திய ரூபாயில் 1088.46 ஆகும். “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.