Advertisment

'அடுத்த முறை நிச்சயம் தங்கம் வெல்வேன்': சென்னை வந்த தங்க மகன் மாரியப்பன் உறுதி!

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் பள்ளி நிகழ்ச்சியில் இந்திய தடகள வீரர் மாரியப்பன் கலந்து கொண்ட நிலையில், அடுத்த முறை ஒலிம்பிக் போட்டியில் கண்டிப்பாக தங்கம் வெல்வேன் என தெரிவித்தார்

author-image
WebDesk
New Update
Paris 2024 Paralympics medal winners Mariyappan Thangavelu and Sheetal Devi CHENNAI Tamil News

பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் களமாடி வெண்கலம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்ற இந்திய வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் ஆகியோருக்கு பிரம்மாண்ட வரவேற்பு

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் பள்ளியில், பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் களமாடி வெண்கலம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்ற இந்திய வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் ஆகியோருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அப்பள்ளியைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்களை எதிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தயார் செய்யும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

Advertisment

இந்த விழாவில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்று ஒலிம்பிக் பதக்க வீரர்களை உற்சாகமாக வரவேற்றனர். நிகழ்ச்சியின் போது பள்ளி மாணவர்களுடன் இணைந்து மாரியப்பன் மற்றும் ஷீத்தல் உற்சாக நடனம் ஆடினர். இதற்கிடையே, ஷீத்தல் மாணவர்கள் முன்னிலையில் அம்பு எய்தி அசத்தினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன், "பயிற்சியின் போது நான் நன்றாக இருந்தேன். 195 சென்டிமீட்டர் வரை உயரம் தாண்டினேன். ஆனால் ஒலிம்பிக் போட்டிக்கு செல்வதற்கு முந்தைய நாள் எனக்கு காய்ச்சல் வந்து விட்டது. அதனால் பயிற்சியில் தாண்டிய உயரம் கூட என்னால் ஒலிம்பிக் போட்டியில் தாண்ட முடியவில்லை. 

ஆனால் அடுத்த முறை கண்டிப்பாக ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வேன். எனக்கு பக்கபலமாக எனது பயிற்சியாளர் இருக்கிறார். பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட உடல்நிலை குறைவால் தவறு நிகழ்ந்துவிட்டது. ஆனால் தங்க பதக்கத்தை தவற விட்டு விட்டேன். அடுத்த முறை இந்த தவறு நடக்காதவாறு பயிற்சியை திட்டமிட்டுள்ளோம். போட்டியில் பங்கேற்பதற்கு முன்னதாக ஒரு மணி நேரம் பயிற்சி எடுப்போம். 

அப்படி பயிற்சி எடுக்கும் போது 185 சென்டிமீட்டர் தான் தாண்ட முடிந்தது. அப்போதே எனது உடல் ஒத்துழைக்கவில்லை என்பதும் தெரிந்து விட்டது. நான் தங்கப்பதக்கம் அடித்து விடுவேன் என இந்தியாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் பருவ நிலையும் உடல் நிலையும் ஒத்துழைக்காததால் என்னால் தங்கப்பதக்கம் வெல்ல முடியாமல் போனது. இளம் தலைமுறையினர் ஒருமுறை தோற்று விட்டால் அதை நினைத்து கவலைப்பட கூடாது. கவலைப்படும் நேரத்தில் அவர்கள் செய்த தவறுகளை அவர்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொண்டால் அடுத்த முறை கண்டிப்பாக வெற்றி பெறலாம்" என்று கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Paris 2024 Olympics Mariyappan Thangavelu Paralympics
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment