பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் காலிறுதிச் சுற்றில் இங்கிலாந்து அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க:
42 நிமிடங்களுக்கு ஒர் வீரர் குறைவாக விளையாடிய போதிலும், பெனால்டி ஷூட்அவுட்டை கட்டாயப்படுத்தி இந்திய ஹாக்கி அணி கிரேட் பிரிட்டன் ஹாக்கி அணியை வீழ்த்தி பாரீஸ் ஒலிம்பிக்கில் அரையிறுதிக்குள் நுழைந்தது.
இந்திய வீரர் அமித் ரோஹிதாஸ் இங்கிலாந்து வீரரின் முகத்தின் அருகே மட்டையை கொண்டு சென்றதற்காக ரெட் கார்டு, பெற்ற நிலையில், இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் கிரேட் பிரிட்டன் அணி பாதி நேரத்தில் கோல் அடித்து 1-1 என சமன் செய்தது. 60 நிமிடங்கள் முடியும் வரை ஸ்கோர் 1-1 என இருந்தது. இந்தியாவுக்காக, கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னரில் ஒரு கோல் அடித்தார், இது 2024 பாரிஸில் அவரது ஏழாவது கோலாகும்.
ஆட்டம் டிராவில் முடிவடைந்ததால், பெனால்டி ஷூட் அவுட் நடந்தது. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரலாற்று வெற்றிக்குப் பிறகு, ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஜெர்மனி அல்லது அர்ஜெண்டினா அணியை எதிர்க்கொள்ள உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“