33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Paris Olympics 2024 India Day 7 Live Updates
இந்நிலையில், பாரிஸ் ஓலிம்பிக் போட்டியின் 7-வது நாளான இன்று நடைபெற்ற பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 25 மீட்டர் பிஸ்டல் தகுதி சுற்று போட்டியில் இந்திய வீராங்கனைகளான மனு பாக்கர் மற்றும் இஷா சிங் கலந்து கொண்டனர். இதில் நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக 2 வெண்கல பதக்கம் வென்று கொடுத்து அசத்திய மனு பாக்கர் மீண்டும் சிறப்பாக செயல்பட்டார்.
முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற சூழலில் மனு பாக்கர் 2-வது இடம் பிடித்து அசத்தினார். இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அவர் 3-வது பதக்கத்தை தட்டிச் செல்வார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதே வேளையில், மற்றொரு இந்திய வீராங்கனையான இஷா சிங் 18-வது இடம்பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
பேட்மிண்டனில், லக்ஷ்யா சென் தொடர்ந்து வேகத்தை தக்க வைத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அவர் சௌ தியென் சென்னை எதிர்கொள்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“