33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 32 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 329 பந்தயங்கள் நடத்தப்படுகிறது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியில் 117 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், ஆக்கி, கோல்ப், ஜூடோ, துடுப்பு படகு, பாய்மர படகு, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் ஆகிய 16 விளையாட்டுகளில் 70 வீரர்களும், 47 வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழா சென் நதியில் இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு அரங்கேறுகிறது. இதுவரை இல்லாத ஒரு அம்சமாக இந்த முறை தொடக்க விழா ஸ்டேடியத்திற்கு வெளியே, பாரீஸ் நகரில் பாய்ந்தோடும் சென் நதியில் வித்தியாசமான முறையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடக்க விழா அணிவகுப்பில் வீரர், வீராங்கனைகள் ஏறக்குறைய 100 படகுகளில் 6 கிலோமீட்டர் பயணிக்க இருக்கிறார்கள். தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India’s schedule at Paris 2024 for 27th July, Saturday
இதனைத் தொடர்ந்து, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நாளை சனிக்கிழமை முதல் போட்டிகள் அரங்கேற உள்ளன. இந்தியா முதலில் துப்பாக்கி சுடும் போட்டியில் தான் களமாடுகிறது. டோக்கியோ நடந்த ஒலிம்பிக் போட்டியில், பெரும்பாலான துப்பாக்கி சுடும் தகுதிச் சுற்று போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகள் வெவ்வேறு நாட்களில் நடந்தன. ஆனால், அதிலிருந்து சிறிய வித்தியாசமாக, முதல் நாள், இவை இரண்டும் 10 மீ ஏர் ரைபிள் கலப்பு அணியில் மீண்டும் மீண்டும் நடைபெற உள்ளது.
அந்தப் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை இணைகளான ரமிதா ஜிண்டால்- அர்ஜுன் பாபுதா மற்றும் இளவேனில் வளரிவன்- சந்தீப் சிங் ஆகிய இரண்டு ஜோடிகள் களம் காண உள்ளனர். தகுதிச் சுற்றில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பின்னர் பதக்கப் போட்டிக்கு முன்னேறும். தங்கம்/வெள்ளிப் பதக்கப் போட்டி, தகுதிச் சுற்றில் இருந்து 1 மற்றும் 2 இடங்களில் உள்ள ஜோடிகளுக்கு இடையே விளையாடப்படும். அதே நேரத்தில் வெண்கலப் பதக்கப் போட்டி 3 மற்றும் 4 இடங்களுக்கு இடையே நடைபெறும். ரியோ மற்றும் டோக்கியோவில் ஏற்பட்ட ஏமாற்றங்களுக்குப் பிறகு, துப்பாக்கி சுடும் வீரர்கள் இந்தியாவுக்கு வெற்றியைக் கொடுக்க விரும்புகிறார்கள்.
மேலும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் அர்ஜுன் சிங் சீமா, சரஜ்போத் சிங், மனு பாக்கர் மற்றும் ரிதம் சங்வான் ஆகியோர் களமிறங்குவார்கள். ஆனால், இந்தப் போட்டிக்கு தகுதி சுற்றுகள் மட்டுமே சனிக்கிழமை திட்டமிடப்பட்டுள்ளன.
நியூசிலாந்திற்கு எதிரான இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு லீக் கட்டத்தில் மிக முக்கியமான தொடக்க போட்டிக்காக காத்திருக்கிறது. மேலும் கடினமான போட்டிகள் வருவதால், அவர்களால் மெதுவாக தொடங்க முடியாது. லக்ஷ்யா சென், சாத்விக்-சிராக் மற்றும் அஷ்வினி-தனிஷா ஆகியோர் பேட்மிண்டன் குரூப்-ஸ்டேஜ் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
துப்பாக்கி சுடுதல்:
10மீ ஏர் ரைபிள் கலப்பு அணி தகுதி (ரமிதா-அர்ஜுன், இளவேனில்-சந்தீப்): மதியம் 12.30 மணி (இந்திய நேரப்படி)
10 மீ ஏர் ரைபிள் கலப்பு அணி வெண்கலப் பதக்கம் / தங்கப் பதக்கப் போட்டிகள் (தகுதி பெற்றிருந்தால்): பிற்பகல் 2 மணி (இந்திய நேரப்படி)
10 மீ ஏர் பிஸ்டல் ஆண்கள் தகுதி (அர்ஜுன் சிங் சீமா, சரஜ்போட் சிங்): பிற்பகல் 2 மணி (இந்திய நேரப்படி)
10 மீ ஏர் பிஸ்டல் மகளிர் தகுதி (மனு பாக்கர், ரிதம் சங்வான்): மாலை 4 மணி (இந்திய நேரப்படி)
ஹாக்கி
இந்தியா vs நியூசிலாந்து: இரவு 9 மணி (இந்திய நேரப்படி)
பேட்மிண்டன்
ஆண்கள் ஒற்றையர் பிரிவு எல் (லக்ஷ்யா சென் vs கெவின் கார்டன்): இரவு 7.10 (இந்திய நேரப்படி)
ஆண்கள் இரட்டையர் பிரிவு சி (சாத்விக்-சிராக் vs கோர்வி-லேபர்): இரவு 8 மணி (இந்திய நேரப்படி)
பெண்கள் இரட்டையர் பிரிவு சி (அஷ்வினி-தனிஷா vs கிம்-காங்): இரவு 11.50 மணி (இந்திய நேரப்படி)
குத்துச்சண்டை:
பெண்களுக்கான 54 கிலோ பிரிலிம்ஸ் சுற்று 32 (ப்ரீத்தி vs தி கிம் ஆ வோ): அதிகாலை 12:02 (இந்திய நேரப்படி) (ஜூலை 28)
ரோயிங்:
ஆண்கள் ஒற்றை ஸ்கல்ஸ் ஹீட்ஸ் (பால்ராஜ் பன்வார், ஹீட் 1): மதியம் 12.30 மணி (இந்திய நேரப்படி)
டேபிள் டென்னிஸ்:
ஆண்கள் ஒற்றையர் பிரிலிம்ஸ் (ஹர்மீத் தேசாய் vs ஜெய்த் அபோ யமன்): இரவு 7.15 மணி (இந்திய நேரப்படி)
டென்னிஸ்:
ஆடவர் இரட்டையர் முதல் சுற்று (பாலாஜி-போபண்ணா vs ரெபோல்-ரோஜ் வாசெலின்): மாலை 4.30 மணி (இந்திய நேரப்படி) (கோர்ட் 12ல் 2வது போட்டி).
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“