/indian-express-tamil/media/media_files/AKAhTTeSZ1qtYBXCBSiP.jpg)
Paris Paralympics 2024:
Nitesh Kumar Badminton Men's Singles, Paris Paralympics 2024:மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. கடந்த 28 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த தொடரில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Paris Paralympics 2024 Day 5 Live Updates: Nitesh Kumar wins India’s second gold
இந்நிலையில், பாரிஸ் பாராலிம்பிக் 2024 ஆடவர் ஒற்றையர் எஸ்.எல் 3 பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீரர் குமார் நிதேஷ் குமார் பிரிட்டனின் டேனியல் பெத்தேலை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 21-14 என்ற புள்ளிக்கணக்கில் நிதேஷ் குமாரும், 2வது செட்டை 21-18 என்ற புள்ளிக்கணக்கில் டேனியல் பெத்தேலும் கைப்பற்றினர்.
இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட் பரபரப்பாக நடைபெற்றது. இதில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். இறுதியில் 3-வது செட்டில் 23-21 என்ற புள்ளிக்கணக்கில் டேனியல் பெத்தேலை வீழ்த்தி நிதேஷ் குமார் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். தோல்வி கண்ட டேனியல் பெத்தேல் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
பாரிஸ் பாராலிம்பிக்கில் இந்தியா வெல்லும் 2வது தங்கம் இதுவாகும். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இந்தியா இதுவரை 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.