Advertisment

ஆத்தி இவரு பயங்கரமான ஆளாச்சே... ஆஸி., வீரரை கேப்டனாக நியமித்த சன் ரைசர்ஸ்!

ஐ.பி.எல் தொடருக்கான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸை இந்த (ஐ.பி.எல் 2024) சீசனுக்கான புதிய கேப்டனாக நியமித்துள்ளது.

author-image
WebDesk
New Update
 Pat Cummins appointed Sunrisers Hyderabad captain IPL 2024 Tamil News

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடந்த ஆண்டில் நடந்த 2023 ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

IPL 2024 | Pat Cummins: 17வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 22 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான முதற்கட்ட  அட்டவணை வெளியாகிய நிலையில், சென்னையில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் எம்.எஸ் தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணி ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ஆர்.பி.சி அணியுடன் மோத உள்ளது. 

Advertisment

இந்நிலையில், ஐ.பி.எல் தொடருக்கான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸை இந்த (ஐ.பி.எல் 2024) சீசனுக்கான புதிய கேப்டனாக நியமித்துள்ளது. 

ஐதராபாத் அணியை தென் ஆப்பிரிக்காவின் ஐடன் மார்க்ரம் வழிநடத்திய நிலையில், அவரது தலைமையிலான ஐதராபாத் அணி கடந்த 2023 சீசனில் 14 போட்டிகளில் 4 இல் மட்டுமே வென்று கடைசி இடத்தைப் பிடித்தது. இதனால், அவரிடமிருந்து அணியின் கேப்டன்சி பொறுப்பை கம்மின்சுக்கு வழங்கியுள்ளது. 

அண்மையில், தென் ஆப்பிரிக்காவில் நடந்த எஸ்.ஏ டி20 போட்டியில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 2வது முறையாக, அதுவும் தொடர்ச்சியாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடி இருந்தாலும், இந்திய மண்ணில் நடந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி பட்டம் வெல்ல உதவிய கம்மின்ஸ் தங்களது அணியில் இருப்பதால் அவரையே கேப்டனாக நியமித்துள்ளது ஐதராபாத். கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடந்த ஆண்டில் நடந்த 2023 ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது. 

இதன் காரணமாக, கடந்த ஆண்டு இறுதியில் நடந்த இந்த சீசனுக்கான ஏலத்தில் பேட் கம்மின்சை 20.5 கோடி ரூபாய்-க்கும், மற்றொரு ஆஸ்திரேலிய அதிரடி வீரரான டிராவிஸ் ஹெட்டை 6.8 கோடி ரூபாய்-க்கும் ஐதராபாத் அணி வாங்கியுள்ளது. 

தொடக்க ஆட்டம் எப்போது?

கடந்த வாரம் வெளியிடப்பட்ட முதல் கட்ட அட்டவணையின்படி, 2 முறை சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ஒரு முறை சாம்பியனான  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் அதன் ஐ.பி.எல் 2024 தொடக்க ஆட்டத்தில் மார்ச் 23 அன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் மோத உள்ளது. 

கொல்கத்தா போட்டிக்குப் பிறகு, சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸை சொந்த மைதானத்தில் 27-ம் தேதி சந்திக்கும். அடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அகமதாபாத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஏப்ரல் 5-ம் தேதி சென்னையில் நடக்கும் போட்டியிலும் களமிறங்குகிறது. 

ஐ.பி.எல் 2024 சீசனுக்கான சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணி:

பேட் கம்மின்ஸ் (கேப்டன்)அப்துல் சமத், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சன், ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ், சன்விர் சிங், ஹென்ரிச் கிளாசென், புவனேஷ்வர் குமார், மயங்க் அகர்வால், டி. நடராஜன், அன்மோல்பிரீத் சிங், மயங்க் மார்கண்டே, உபேந்திர சிங் யாதவ், உம்ரான் மாலிக், நிதிஷ் குமார் ரெட்டி, ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஷாபாஸ் அகமது, டிராவிஸ் ஹெட், வனிந்து ஹசரங்கா, ஜெய்தேவ் உனத்கட், ஆகாஷ் சிங், ஜாதவேத் சுப்ரமணியன்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2024: Pat Cummins appointed Sunrisers Hyderabad captain for upcoming season

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pat Cummins IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment