ஆஸ்திரேலியா ஒருநாள் கேப்டன் நியமனம்: புதிய வரலாறு படைத்த கம்மின்ஸ்
ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
Pat Cummins Tamil News: ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தொடக்க வீரர் ஆரோன் பின்ச் செயல்பட்டு வந்தார். அவர் கடந்த மாதம் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் புதிய கேப்டனுக்கான தேடுதல் வேட்டையில் இறங்கியது. இந்த தேடுதலின் போது டேவிட் வார்னர், க்ளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரின் பெயர்கள் புதிய கேப்டன் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Advertisment
கடந்த மார்ச் 2018ல் தென்ஆப்பிரிக்க தொடரின் கேப்டவுன் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா பேட்டர் கேமரூன் பான்கிராஃப்ட் பந்தின் ஒரு பக்கத்தை சேதப்படுத்த முயன்றார். அது தொலைக்காட்சி கேமராக்களில் படம் பிடிக்கப்பட்டு சர்ச்சையில் சிக்கினார். இதனால், பான்கிராஃப்டை 9 மாதங்களுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்தது. அப்போது கேப்டன் மற்றும் துணை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருந்தனர். அவர்களுக்கு தேசிய அணியை வழிநடத்துவதில் இருந்து 12 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது.
இருவரும் 2019ல் தான் தேசிய அணிக்குத் திரும்பினர் மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா சமீபத்தில் வார்னரின் தலைமை இடைநீக்கத்தை மதிப்பாய்வு செய்வதாகக் கூறியது. ஏனெனில் அவர் அணியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். எனினும், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியை பேட் கம்மின்ஸ் சிறப்பாக நடத்தி வருவதால் அவரையே ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
Advertisment
Advertisements
புதிய வரலாறு படைத்த கம்மின்ஸ்
இந்த நிலையில் தான், ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், ஒயிட்-பால் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை வழிநடத்தும் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும், புதிய வாரலாற்றையும் பேட் கம்மின்ஸ் படைத்துள்ளார்.
வருகிற நவம்பர் 17 ஆம் தேதி அடிலெய்டு ஓவலில் தொடங்கும் இங்கிலாந்து தொடரில் இருந்து கேப்டன் பொறுப்பை கம்மின்ஸ் ஏற்றுக்கொள்வார் என்றும், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக அவர் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கம்மின்ஸ் கூறுகையில், நான் பின்ச்-யின் கீழ் விளையாடுவதை மிகவும் ரசித்தேன். அவரது தலைமையிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். எங்கள் ஒரு நாள் போட்டி அணியில் அதிக அனுபவம் உடைய வீரர்கள் இருப்பது எங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம்" என்று தெரிவித்தார்.