scorecardresearch

15.50 கோடியை செலவு செய்ய கம்மின்ஸ் காதலி கொடுத்த ஐடியா – பத்தலனா அடுத்த சீசன்ல அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்

பேட் கம்மின்ஸ்…. ஆஸ்திரேலியாவின் இந்த இளம் வேகப்பந்து வீச்சாளார் ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு கிரிக்கெட் வீரராக உருவாகியுள்ளார். இன்று காணப்பட்டது அரிய வகை சூரிய கிரகணமா ? 2015ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ரூ. 16 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதே இதுவரை அதிக தொகையாக உள்ளது. தலையை முட்டுக் கொடுத்து கேட்ச் பிடிச்சு பார்த்து இருக்கீங்களா? – இதெல்லாம் எப்படி […]

Pat Cummins girlfriend idea to spend ipl money 15.5 crore - 15.50 கோடியை செலவு கம்மின்ஸ் காதலி கொடுத்த ஐடியா - பத்தலனா சொல்லுங்க, அடுத்த சீசன்ல அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்
Pat Cummins girlfriend idea to spend ipl money 15.5 crore – 15.50 கோடியை செலவு கம்மின்ஸ் காதலி கொடுத்த ஐடியா – பத்தலனா சொல்லுங்க, அடுத்த சீசன்ல அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்
பேட் கம்மின்ஸ்…. ஆஸ்திரேலியாவின் இந்த இளம் வேகப்பந்து வீச்சாளார் ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு கிரிக்கெட் வீரராக உருவாகியுள்ளார்.

இன்று காணப்பட்டது அரிய வகை சூரிய கிரகணமா ?

2015ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ரூ. 16 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதே இதுவரை அதிக தொகையாக உள்ளது.

தலையை முட்டுக் கொடுத்து கேட்ச் பிடிச்சு பார்த்து இருக்கீங்களா? – இதெல்லாம் எப்படி தான் முடியுமோ!! (வீடியோ)

ஆனால், இந்த ஐபிஎல் 2020 சீசனில் அனைத்து சாதனைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் கம்மின்ஸ். டெல்லி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என பல அணிகள் மோதிய போதிலும் இறுதியில் 15.5 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.


இதுவரை வெளிநாட்டு வீரர்களில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவராக பென் ஸ்டோக்ஸ் விளங்கினார். அவர் ஐபிஎல் 2018 சீசனில் 14.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

எல்லைக் கோட்டில் இருந்து பவுலிங்; கீப்பரே நம்பாத ரன் அவுட் – இது Big Bashல் மட்டும் சாத்தியம் (வீடியோ)

ஒரு பௌலர் இவ்வளவு பெரிய தொகைக்கு ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டது இதுவே முதல் முறை.

இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸிடம், ஐபிஎல் ஏலத்தில் கிடைத்த பணத்தில் என்ன செய்யப் போகிறீர்கள்? என்ற கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த கம்மின்ஸ், “எனக்கு இந்தப் பணத்தை வைத்து என்ன செய்ய வேண்டும் எனத் தெரியவில்லை. எனது காதலி பெக்கி பாஸ்டன், என்னிடம் முதலில் நமது வளர்ப்பு நாய்க்கு இரண்டு பொம்மைகளை வாங்கலாம்” எனக் கூறினார். அவர் தனது தேவைகளை வரிசைப்படுத்தி வைத்துள்ளார் என்றார்.

மேலும், “ஐபிஎல் ஏலத்தை தான் வீட்டிலிருந்து தொலைக்காட்சியில் பார்த்ததாகவும் அப்போது நடைபெற்ற நிகழ்வுகளை தன்னால் முதலில் நம்ப முடியவில்லை. நல்ல குடும்பத்தினர், நண்பர்கள், சிறந்த அணி வீரர்கள் உள்ளிட்ட அன்பு செலுத்தும் மக்களின் மத்தியில் தான் இருப்பதாகக் கருதுகிறேன். நான் கிரிக்கெட் விளையாடுவதை நேசிக்கிறேன். எனக்கு கிடைத்த அனைத்திற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன், ஆனால் இவை ஒருபோதும் என்னை மாற்றாது என்றார்.

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Pat cummins girlfriend idea to spend ipl money 15 5 crore