Advertisment

IND vs AUS: இந்த பிக் ஹிட்டர்தான் எங்க அணி 'எக்ஸ் ஃபேக்டர்'; உதார் விடும் ஆஸி.

India vs Australia T20I series: press conference Pat Cummins Tamil News: இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடரில் ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட் எக்ஸ் ஃபேக்டராக இருப்பார் என்று அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Pat Cummins On Star Power-Hitter Tim David as X-Factor press conference

Australia Pacer Pat Cummins press meet

India vs Australia T20I series - Pat Cummins Tamil News: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியை கேப்டன் ஆரோன் பின்ச் வழிநடத்துகிறார். இந்திய அணியை கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்துகிறார். இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டி-20 ஆட்டம் மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் வருகிற 20 ஆம் தேதி நடக்கிறது.

Advertisment

இந்நிலையில், வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் அவர்களது அணியில் இடம்பிடித்துள்ள டிம் டேவிட், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் எக்ஸ் ஃபேக்டராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

publive-image

"டிம் டேவிட்க்கு வாய்ப்பு கிடைத்ததைப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் உலகின் சிறந்த வீரர்களுள் ஒருவராக இருக்கிறார். டி20 கிரிக்கெட்டின் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமான விஷயம். டி20-யில் ரன் அடித்தவர்களில் பெரும்பாலானோர் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக இருந்துள்ளனர். அல்லது டாப்-ஆர்டரில் பேட்டிங் செய்பவராக இருந்துள்ளனர்.

இதேபோல் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்துவீசும்போது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது கடினம். ஆனால், அவர் அருமையாக விளையாடி வருகிறார். அவருக்கு வாய்ப்பு கிடைத்தால், உள்நாட்டு டி20 லீக்கில் அவர் செய்து வருவதை அவரால் தொடர முடியும் என்று நம்புகிறேன்.

அவர் ஒரு எக்ஸ் ஃபேக்டர் என்று நான் அதை ஒப்புக்கொள்கிறேன். இது சற்று வித்தியாசமாக இருக்கிறது. எனவே, நாங்கள் அதை எதிர்நோக்கியுள்ளோம்." என்று பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

publive-image

சமீபத்தில் நடந்த முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா இறுதிப் போட்டிக்கு வரத் தவறிதை அவர் எவ்வளவு நெருக்கமாகப் பின்தொடர்ந்தார் என்று செய்தியாளர்கள் கேட்டபோது கம்மின்ஸ், "முற்றிலும் வெளிப்படையாகச் சொல்வதானால், அந்தப் போட்டிகள் எதையும் நான் பார்க்கவில்லை. இலங்கை வென்றது என்று நினைக்கிறேன்? நேர்மையாக, நான் அதைச் செய்யவில்லை. அது எதையும் பார்க்கவில்லை. நான் விராட் கோலி விளையாடியதைப் பார்த்தேன். அவர் சதம் அடித்தார் என்று நினைக்கிறேன். அவர் ஒரு கிளாஸ் பிளேயர், அவர் எப்போதுமே ஒரு கட்டத்தில் ஃபார்முக்குத் திரும்பப் போகிறார். அடுத்த வாரம் அவர் எங்கள் அணிக்கு சவாலாக இருக்கப் போகிறார்." என்று அவர் கூறினார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா: இரு அணி வீரர்கள் பட்டியல்:

இந்தியா:

ரோஹித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா

ஆஸ்திரேலியா:

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டிம் டேவிட், ஸ்டீவன் சுமித், மேத்யூ வேட், கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல், கம்மின்ஸ், சீன் அப்போட், ஆஷ்டன் அகர், நாதன் எலிஸ், ஹேசில்வுட், ஜோஷ் இங்லிஸ், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், ஆடம் ஜம்பா.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Virat Kohli India Vs Australia Sports Cricket Pat Cummins
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment