/indian-express-tamil/media/media_files/GqXeoR2QFqQGhAxfpRsV.jpg)
ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை பதம் நிஸ்ஸங்க பெற்றார்.
SL vs AFG | afghanistan-vs-sri-lanka | 50 ஓவர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் பதும் நிஸ்ஸங்க (Pathum Nissanka).
மேலும், 2000 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக சனத் ஜெயசூர்யா அடித்த 189 ரன்களை முறியடித்து, இலங்கையின் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இப்போது அதிக தனிநபர் ஸ்கோரைப் பெற்ற வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
Pathum Nissanka created history when he scored a double-hundred 👏#SLvAFG | More ➡️ https://t.co/O6hUwrWwRupic.twitter.com/uawgPgNpgt
— ICC (@ICC) February 9, 2024
20 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் ஒரு இன்னிங்ஸில் நிஸ்ஸங்க ஆட்டமிழக்காமல் 210 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் இலங்கை மொத்தமாக 381/3 ரன்கள் எடுத்திருந்தது.
இலங்கையின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அவிஸ்கா பெர்ணான்டோ 88 பந்துகளில் 88 ரன்கள் எடுத்தார். இவர் 8 பவுண்டரி 3 சிக்ஸர் அடித்திருந்தார்.
தொடர்ந்து குஷால் மெண்டிஸ் 16 ரன்னிலும், சமரவிக்ரம 45 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அசலங்கா 7 ரன்னில் அவுட் ஆகாமல், பதும் நிஸங்கவுக்கு பக்க பலமாக கடைசி வரை களத்தில் நின்றார்.
Mohammad Nabi and Azmatullah Omarzai are putting on a record partnership as Afghanistan recover from 55/5 😯#SLvAFG 📝: https://t.co/JviXc7ZTlupic.twitter.com/jEhHNROb1B
— ICC (@ICC) February 9, 2024
382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியின் அஸ்மதுல்லா ஸாய் 105 பந்துகளில் 128 ரன்கள் எடுத்தார். மறுபுறம் முகம்மது நபி 130 பந்துகளில் 136 ரன்கள் எடுத்தார்.
இவர் 15 பவுண்டரிகளுடன் 3 சிக்ஸர் அடித்திருந்தார். கடைசி 3 ஓவரில் அணியின் வெற்றிக்கு 71 ரன்கள் தேவைப்பட்டது.
A record-shattering double-hundred from Pathum Nissanka 🔥#SLvAFG | 🔗: https://t.co/0oWwvIuZRGpic.twitter.com/vOzA3wO7BD
— ICC (@ICC) February 9, 2024
மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவட் ஆனார்கள். இந்த நிலையில் கடைசி 2 ஓவரில் 61 ரன்கள் ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு தேவைப்பட்டது. இந்த நிலையில் இலங்கை 42 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வென்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.