Advertisment

சொந்த மண்ணில் அசத்திய பாட்னா : குஜராத் அணிக்கு 9-வது வெற்றி

புரோ கபடியில் பாட்னாவில் உள்ள பாட்லிபுத்ரா உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - பெங்கால் வாரியரஸ் அணிகள் மோதியது.

author-image
WebDesk
New Update
Patna Pirates vs Bengal Warriors and U Mumba vs Gujarat Giants PKL Season 10 match updates in tamil

புரோ கபடி லீக் 2023 - 24: பாட்னா பைரேட்ஸ் - பெங்கால் வாரியரஸ்; யு மும்பா - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pro Kabaddi League: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.

Advertisment

இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டம் நடைபெற உள்ளது. அதில், பாட்னாவில் உள்ள பாட்லிபுத்ரா உள்விளையாட்டு அரங்கத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - பெங்கால் வாரியரஸ் அணிகள் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், பாட்னா பைரேட்ஸ் அணி 44-28 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம், 15 போட்டிகளில் 7-வது வெற்றியை பதிவு செய்த பாட்னா அணி 42 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்திலும், தோல்வியடைந்த பெங்கால் வாரியர்ஸ் அணி 6 வெற்றியுடன் 38 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தையும் பிடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் யு மும்பா - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோத உள்ளன. பரபரப்பான இந்த போட்டியில், குஜராத் அணி 44-35 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 9-வது வெற்றியை பதிவு செய்த குஜராத் அணி 49 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திலும், 40 புள்ளிகளுடன் யுமும்பா அணி 7-வது இடத்திலும் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment