Advertisment

ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸிடம் தமிழ் தலைவாஸ் தோல்வி; பாட்னா பைரேட்ஸ் - பெங்களூரு புல்ஸ் ஆட்டம் டிரா

புரோ கபடி தொடரில் பாட்னாவில் உள்ள பாடலிபுத்திரம் உள்விளையாட்டு அரங்கத்தில் புதன்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியிடம் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்தது.

author-image
WebDesk
New Update
Patna Pirates vs Bengaluru Bulls and Jaipur Pink Panthers vs Tamil Thalaivas PKL Season 10 match updates in tamil

புரோ கபடி லீக் 2023 - 24: பாட்னா பைரேட்ஸ் - பெங்களூரு புல்ஸ்; ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs தமிழ் தலைவாஸ் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pro Kabaddi League: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.

Advertisment

புரோ கபடி தொடரில் பாட்னாவில் பாடலிபுத்திரம் உள்விளையாட்டு அரங்கத்தில் புதன்கிழமை 2 போட்டிகள் நடைபெற்றது. 

புரோ கபடி தொடரில் பாட்னா பாடலிபுத்திரம் உள்விளையாட்டு அரங்கத்தில் புதன்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெற்ற பாட்னா பைரேட்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.

பாட்னா பைரேட்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில், ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 29 புள்ளிகள் பெற்றிருந்ததால், வெற்றி தோல்வி இன்றி இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.

இதையடுத்து, புரோ கபடி தொடரில் பாட்னாவில் உள்ள பாடலிபுத்திரம் உள்விளையாட்டு அரங்கத்தில் புதன்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியிடம் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்தது.

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs தமிழ் தலைவாஸ் மோதல் 

நடப்பு புரோ கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 16 போட்டிகளில் 7ல் வெற்றி, 9ல் தோல்வி என 40 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

தமிழ் தலைவாஸ் அணி பிளே-ஆஃப்க்கு முன்னேற முதல் 6 இடங்களுக்குள் வர வேண்டும். அதற்கு தமிழ் தலைவாஸ் அணி மீதமுள்ள போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

தமிழ் தலைவாஸ் அணி அதன் முந்தைய மூன்று ஆட்டங்களில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு புல்ஸ் அணியை 28-45 என்ற கணக்கிலும், தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 29-54 என்ற கணக்கிலும் வீழ்த்தி அசத்தியது. இதேபோல், யு மும்பா அணியை 34 - 50 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றியை ருசித்தது.

புரோ கபடி தொடரில் பாட்னாவில் உள்ள பாடலிபுத்திரம் உள்விளையாட்டு அரங்கத்தில் புதன்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியிடம் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்தது.

 ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் இடையே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்ட நேரம் முடிவில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 42 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் அணி 27 புள்ளிகளும் எடுத்திருந்தது. இதன் மூலம், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 15 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment