Advertisment

பாட்னாவை சாய்த்த டெல்லிக்கு த்ரில் வெற்றி; பெங்களூருவை புரட்டி எடுத்த மும்பா அபார வெற்றி

புரோ கபடி தொடரில் நேற்று இரவு 8 மணிக்கு மிகவும் பரபரப்பாக அரங்கேறிய ஆட்டத்தில்  பாட்னா பைரேட்ஸ் அணியை 37-38 என்கிற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

author-image
WebDesk
New Update
Patna Pirates vs Dabang Delhi KC and U Mumba vs Bengaluru Bulls Pro Kabaddi League Season 10 match updates in tamil  

புரோ கபடி லீக் 2023: பாட்னா பைரேட்ஸ் - தபாங் டெல்லி; யு மும்பா - பெங்களூரு புல்ஸ் அணிகள் இன்று மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pro Kabaddi League 2023: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. 

Advertisment

இந்நிலையில் இந்த தொடரில் நேற்று வியாழக்கிழமை 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில், மும்பையில் இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில்  பாட்னா பைரேட்ஸ் அணியை ஒரு புள்ளி வித்தியாசத்தில் 37-38 என்கிற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 35 புள்ளிகளுடன் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

இதனைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் யு மும்பா - பெங்களூரு புல்ஸ் அணிகளும் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 40-35 என்ற புள்ளிகள் கணக்கில்  யு மும்பா பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment