Advertisment

உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தியது தபாங் டெல்லி : பாட்னா - புனேரி ஆட்டம் டிரா

பெங்கால் வாரியர்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில் 44-28 என்ற கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணி இன்றைய ஆட்டத்தை டிரா செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
Patna Pirates vs Puneri Paltan and Dabang Delhi KC Vs UP Yoddhas PKL Season 10 match updates in tamil

புரோ கபடி 2023 -24: பாட்னா பைரேட்ஸ் - புனேரி பால்டன்; பாங் டெல்லி - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.

Advertisment

இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டம் நடைபெற உள்ளது. அதில், பாட்னாவில் உள்ள பாட்லிபுத்ரா உள்விளையாட்டு அரங்கத்தில் இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - புனேரி பால்டன் அணிகள் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டி 32-32 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் புனேரி அணி 63 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பாட்னா அணி 45 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளது. 

இன்று இரவு 9 மணிக்கு நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதியது.  பரபரப்பான இந்த போட்டியில், தபாங் டெல்லி அணி 36-27 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லி அணி 59 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், உ.பி யோத்தாஸ் அணி 23 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் உள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment