Advertisment

புரோ கபடி லீக்: பாட்னா பைரேட்ஸ் அணியிடம் தமிழ் தலைவாஸ் போராடி தோல்வி!

புரோ கபடி லீக் தொடரில் பாட்னா பைரேட்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் இடையே ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி ஸ்டேடியத்தில் இன்று வெள்ளிக்கிழமை (அக்.25) இரவு 8 மணிக்கு நடந்த முதல் ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் அணி போராடி தோல்வி அடைந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Patna Pirates vs Tamil Thalaivas in match 15 of Pro Kabaddi Season 11 in tamil

புரோ கபடி லீக் 2024: பாட்னா பைரேட்ஸ் vs தமிழ் தலைவாஸ்

11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் கடந்த 18 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்தத் தொடரில் 12 அணிகள் களமாடியுள்ளன. இதில், ஒவ்வொரு அணியும் தலா 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும். 

Advertisment

லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேறும். லீக்கில் 'டாப்-2' இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில், புரோ கபடி லீக் தொடரில் பாட்னா பைரேட்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் இடையேயான ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி ஸ்டேடியத்தில் இன்று வெள்ளிக்கிழமை (அக்.25) இரவு 8 மணிக்கு நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில், பாட்னா பைரேட்ஸ் - தமிழ் தலைவாஸ் ஆகிய இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தன. இருப்பினும், ஆட்ட நேர முடிவில், பாட்னா பைரேட்ஸ் அணி 42 புள்ளிகளை எடுத்திருந்தது. தமிழ் தலைவாஸ் அணி 40 புள்ளிகளை எடுத்திருந்தது. இதன் மூலம், தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி பெற்றது. ஹாட்ரிக் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ் தலைவாஸ் அணி போராடி தோல்வி அடைந்தது.

நடப்பு சீசனில் அடுத்தடுத்த வெற்றிகளுடன் பட்டையை கிளப்பி வருகிறது தமிழ் தலைவாஸ். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸையும், அடுத்த ஆட்டத்தில் புனேரி பல்டனையும் வீழ்த்தி, 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் பாட்னா பைரேட்சுக்கு எதிராக களமாடும் தமிழ் தலைவாஸ் ஹாட்ரிக் வெற்றிக்கு குறி வைக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

நேருக்கு நேர் 

புரோ கபடி லீக் வரலாற்றில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் 14 முறை மோதியுள்ளன. இதில் 7 முறை பாட்னா பைரேட்ஸ் அணியும், 4 முறை தமிழ் தலைவாஸ் அணியும் வென்றுள்ளன. 3 போட்டிகள் டையில் முடிவடைந்துள்ளன.

கடைசியாக இவ்விரு அணிகள் மோதிய ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் 41-25 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Pro Kabaddi Tamil Thalaivas Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment