Advertisment

மிரட்டி எடுத்த அஜிங்க்யா பவார்... பாட்னாவை பந்தாடிய தமிழ் தலைவாஸ்!

புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

author-image
WebDesk
New Update
 Patna Pirates vs Tamil Thalaivas Pro Kabaddi League Season 10 match updates in tamil  

புரோ கபடி லீக் 2023 - 24: பாட்னா பைரேட்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pro Kabaddi League | Tamil Thalaivas: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.

Advertisment

இந்நிலையில், இந்த தொடரில் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒரே ஒரு போட்டி நடைபெற்றது. இதில், இரவு 8 மணிக்கு நடந்த ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் -  தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 41-25 என்கிற புள்ளிகள் கணக்கில்  பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது.

தமிழ் தலைவாஸ் அணி தரப்பில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜிங்க்யா பவார் அதிகபட்சமாக 10 புள்ளிகளை எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் தமிழ் தலைவாஸ் 25 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 10வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 



பாட்னா பைரேட்ஸ் - தமிழ் தலைவாஸ் மோதல் 

நடப்பு சீசனில் இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 3ல் வெற்றி, 9ல் தோல்வி என தமிழ் தலைவாஸ் அணி 20 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 11 வது இடத்தில் உள்ளது. அந்த அணி முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று அதிரடியாக தொடரைத் தொடங்கியது. அதன்பிறகு, 7 தொடர் தோல்விகளைச் சந்தித்தது. 

இதன்பின்னர்  உ.பி. யோத்தாஸ் அணிக்கு எதிராக 19 புள்ளிகள் வித்தியாசத்தில்  தமிழ் தலைவாஸ் அபார வெற்றி பெற்றது. இதனால், அணி இனிமேல் வெற்றிப் பாதையில் பயணிக்கும் என கருதினார்கள். ஆனால், நேற்று முன்தினம் நடந்த ஹரியானா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியுற்றது. எனவே, புள்ளிகள் பட்டியலில் நல்ல இடத்தில் முடிக்க அவர்கள் இன்றையப் போட்டியில் ஆறுதல் வெற்றியை எதிர்பார்க்கிறார்கள். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Thalaivas Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment