Pro Kabaddi League: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஒரே ஒரு லீக் ஆட்டம் நடைபெற உள்ளது. கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
பிப்ரவரி 10 அன்று யு மும்பாவுக்கு எதிரான ஆட்டத்தில் 44-23 என்ற கணக்கில் வெற்றி பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றியை ருசித்தது. மறுபுறம், பெங்கால் வாரியர்ஸுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் 35-55 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
நடப்பு சீசனில் இதுவரை 20 போட்டிகளில் விளையாடியுள்ள பாட்னா பைரேட்ஸ் 10ல் வெற்றி, 7ல் தோல்வி, 3ல் டிரா என 63 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. அந்த அணி பிளே ஆஃப்-க்குள் நுழைய இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதவேளையில், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் தெலுங்கு டைட்டன்ஸ் ஆறுதல் வெற்றி பெற போராடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. \
இந்தப் போட்டியில் இரு அணிகளும் கடுமையாக விளையாடின. ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் பாட்னா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மறுபுறம் தெலுங்கு டைட்டன்ஸ் அணியில் கேப்டன் பவன் ஷெராவத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரு அணிகளும் மாறி மாறி முன்னிலைப் பெற்று வந்தாலும், இறுதியில் பாட்னா 2 புள்ளிகள் வித்தியாசத்தில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.
பாட்னா பைரேட்ஸ் 38 புள்ளிகளையும், தெலுங்கு டைட்டன்ஸ் 36 புள்ளிகளையும் எடுத்தது. பாட்னா அணியில் அதிகபட்சமாக மஞ்ஜீத் 8 புள்ளிகளையும், சந்தீப் 7 புள்ளிகளையும் எடுத்தனர். தெலுங்கு டைட்டன்ஸ் அணியில் அதிகபட்சமாக பவன் ஷெராவத் 16 புள்ளிகளை எடுத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“