Advertisment

தெலுங்கானாவை அடித்தது பெங்கால் : யுமும்பா அணியை வீழ்த்தியது பாட்னா

புரோ கபடியில் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - யு மும்பாஅணிகள் மோதியது.

author-image
WebDesk
New Update
Patna Pirates vs U Mumba and Bengal Warriors vs Telugu Titans PKL Season 10 match updates in tamil

புரோ கபடி லீக் 2023 -24: பாட்னா பைரேட்ஸ் vs யு மும்பா மற்றும் பெங்கால் வாரியர்ஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pro Kabaddi League: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.

Advertisment

இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - யு மும்பாஅணிகள் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 44-23 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி பெற்று 63 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. தோல்வியடைந்த யுமும்பா அணி 41 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளது.

இதையடுத்து, இரவு 9 மணிக்கு நடைபெற்ற  மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்  - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதியது. பரபரபப்பான இந்த ஆட்டத்தில், பெங்கால் வாரியர்ஸ் அணி 55-35 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பெஙகால் வாரியர்ஸ் 44 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 16 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment