Sports Manager Ankur Paliwal posts video of Pawan Sehrawat from Mumbai hotel Tamil News
Pro Kabaddi 2022: Tamil Thalaivas captain Pawan Sehrawat update news in tamil: 12 அணிகள் களமாடும் 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த 7 ஆம் தேதி முதல் தொடங்கியது. டிசம்பர் மாத இறுதிவரை நடைபெற உள்ள இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் சென்னையை மையாக கொண்டு உதயமாகியுள்ள தமிழ் தலைவாஸ் அணி களமாடி வருகிறது.
Advertisment
பவன் ஷெராவத் காயம்
இந்நிலையில், தமிழ் தலைவாஸ் அணியின் முன்னணி வீரரும், கேப்டனுமான பவன் ஷெராவத்துக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் காயம் ஏற்பட்டது. பவன் குஜராத் வீரரை பிடிக்க முயன்றபோது அவரது வலது முழங்கால் அப்படியே மடங்கியது. இந்த பலத்த காயத்தால் அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார். பின்னர் அவரை ஸ்ட்ரெச்சரில் தூக்கி சென்றனர். இந்த சம்பவம் போட்டியைப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. மேலும் தமிழ் தலைவாஸ் அணியினர் அப்படியே உறைந்தனர்.
Advertisment
Advertisements
பயிற்சியாளர் உதயகுமார் நம்பிக்கை
பவன் ஷெராவத்தின் காயம் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் பேசிய தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் ஜெ உதயகுமார், பவன் தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் களமாடுவார் என்றும், அணியின் வீரர்களுடன் தொடர்பில் இருக்கிறார் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் அவர்களை ஊக்குவிக்கிறார்.” என்று கூறி நம்பிக்கை தெரிவித்தார்.
வீடியோ வெளியிட்ட மேனேஜர்
இந்நிலையில், தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் பவன் ஷெராவத் நன்றாக நடந்து வீடியோ ஒன்றை அவரின் மேனேஜர் அங்கூர் பாலிவால் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
மேனேஜர் அங்கூர் பாலிவால் இரண்டு ஸ்டோரிக்களை பகிர்ந்த நிலையில், அதில் ஒன்றில் மும்பை உள்நாட்டு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள சாண்டாக்ரூஸில் உள்ள ஹோட்டல் தாஜ் புகைப்படத்தை வெளியிட்டார். அவரது அடுத்த ஸ்டோரியில் தமிழ் தலைவாஸ் கேப்டன் பவன் செஹ்ராவத் காணப்பட்டார்.