'அவர் தேசத்தின் சொத்து..!' பவன் ஷெராவத் காயம் பற்றி பயிற்சியாளர் உதயகுமார் கூறுவது என்ன?
pawan sehrawat injury latest update in tamil: தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் உதய குமார், கேப்டன் பவன் ஷெராவத்தின் காயம் குறித்து புதிய அப்டேட் கொடுத்துள்ளார்.
pawan sehrawat injury latest update in tamil: தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் உதய குமார், கேப்டன் பவன் ஷெராவத்தின் காயம் குறித்து புதிய அப்டேட் கொடுத்துள்ளார்.
Pro Kabaddi League 2022: Tamil Thalaivas coach shares big update on Pawan Sehrawat's return Tamil News
News about Tamil Thalaivas, Pawan Sehrawat and PKL in tamil: 12 அணிகள் களமாடும் 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த 7 ஆம் தேதி முதல் தொடங்கியது. டிசம்பர் மாத இறுதிவரை நடைபெற உள்ள இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் சென்னையை மையாக கொண்டு உதயமாகியுள்ள தமிழ் தலைவாஸ் அணி களமாடி வருகிறது.
Advertisment
பவன் ஷெராவத் காயம்
கேப்டன் பவன் ஷெராவத் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி அதன் தொடக்க ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்ட நிலையில், அந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடினர். இறுதியில் 31-31 என்ற கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது.
இந்த ஆட்டத்தின் போது தமிழ் தலைவாஸ் அணியின் முன்னணி வீரரும், கேப்டனுமான பவன் ஷெராவத்துக்கு காயம் ஏற்பட்டது. குஜராத் அணி வீரரை அவர் பிடிக்க முயன்றபோது அவரது வலது முழங்கால் அப்படியே முடங்கியது. இந்த பலத்த காயத்தால் அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார். பின்னர் அவரை ஸ்ட்ரெச்சரில் தூக்கி சென்றனர். இந்த சம்பவம் போட்டியைப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. மேலும் தமிழ் தலைவாஸ் அணியினர் அப்படியே உறைந்தனர். இதன்பிறகு அவரின் காயம் தொடர்பாக பேசி தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் உதய குமார், ‘பவன் இன்னும் 2-3 நாட்களில் அணிக்கு திரும்புவார்’ என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.
Advertisment
Advertisements
இதயனையடுத்து, தமிழ் தலைவாஸ் அணி களமாடிய 2வது லீக் ஆட்டத்தில் கேப்டன் பவன் ஷெராவத் இல்லாமல் விளையாடியது. அந்த ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர்கொண்ட நிலையில், ஹரியானா 27 புள்ளிகளையும், தமிழ் தலைவாஸ் அணி 22 புள்ளிகளையும் பெற்றன. இதனால், தமிழ் தலைவாஸ் அணி 5 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
புதிய அப்டேட் கொடுத்த பயிற்சியாளர்
இந்நிலையில், இந்த போட்டிக்கு பிறகான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பயிற்சியாளர் உதய குமார், கேப்டன் பவன் ஷெராவத்தின் காயம் குறித்து புதிய அப்டேட் கொடுத்துள்ளார்.
"பவன் எங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் முக்கியமானவர். அவர் ஒரு தேசிய பொக்கிஷம். இதனால், அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பற்றி நாங்கள் யோசித்து வருகிறோம். அணி நிர்வாகம் எந்த அபாயத்தையும் எடுக்க தயாராக இல்லை.
அவர் முழு உடற்தகுதி பெறும் வரை நாங்கள் காத்திருப்போம். பின்னர் நாங்கள் அவரை ஆடும் செவனில் மீண்டும் கொண்டு வருவோம். அவர் விரைவில் குணமடைந்து மேட்டிற்கு திரும்புவார் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
9வது சீசனுக்கான ஏலத்தில், தமிழ் தலைவாஸ் அணி பவன் செஹ்ராவத்தை லீக் வரலாற்றில் அதிக விலை கொண்ட வீரராக ரூ.2.26 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவரது வருகை ரெய்டிங் பிரிவில் மற்ற அணிகளுக்கு கடும் சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் காயத்தால் அவதியுற்று வருகிறார். விரைவில் அவர் தனது காயத்தில் இருந்து மீள்வார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.