/tamil-ie/media/media_files/uploads/2023/08/tamil-indian-express-2023-08-10T181935.591.jpg)
"பெரிய போட்டிகள் வருவது எனக்கு நல்ல விஷயம். ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக நாங்கள் அதிக அளவில் பயிற்சி செய்து வருகிறோம்." என்று பவன் ஷெராவத் கூறினார்.
Pawan Sehrawat - Asian Games 2023 Tamil News: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவில் வருகிற செப்டம்பர் 23ம் தேதி முதல் அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய கபடி அணியை பவன் ஷெராவத் வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஸ்போர்ட்ஸ்கீடாவிடம் பேசிய பவன், போட்டியைப் பொருட்படுத்தாமல் தனது ஆக்ரோஷமான கேப்டன்சி எப்படி இருக்கும் என்றும், டிஃபன்ஸ் விளையாடுவதை அவர் விரும்புவதில்லை என்றும் அவர் தெரிவித்துளளார்.
"ஒவ்வொருவருக்கும் இயற்கையான விளையாட்டு உண்டு. முன்பக்கத்தில் இருந்து தாக்குவதற்கு எனது சிந்தனை எப்போதும் ஆக்ரோஷமாக இருக்கும். பி.கே.எல் அல்லது தெற்காசிய விளையாட்டு அல்லது ஆசிய கபடி சாம்பியன்ஷிப் என இதுவரை நான் டிஃபன்ஸ்-க்காக விளையாடியதில்லை. அதனால், நான் டிஃபன்ஸ் அணியில் இருந்து விளையாடுவதில்லை. நான் அட்டாக் செய்யும் மனநிலையை வைத்திருக்கிறேன். திட்டம் மாறும். இல்லையெனில் நாங்கள் அட்டாக் செய்து விளையாடுவோம்.
பெரிய போட்டிகள் வருவது எனக்கு நல்ல விஷயம். ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக நாங்கள் அதிக அளவில் பயிற்சி செய்து வருகிறோம். பின்னர் பி.கே.எல் போட்டிகள் வரும் அது நவம்பர் அல்லது டிசம்பரில் தொடங்கும். எனவே நாங்கள் அதற்கும் தயாராகி வருகிறோம்."என்று பவன் செஹ்ராவத் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.