அதிக தொகை என் நோக்கம் அல்ல; ஆனால் புரோ கபடி ஏலத்தில் பங்கேற்பேன்: பவன் ஷெராவத்
'குறிப்பிட்ட தொகையை சம்பாதிப்பதற்காக எந்த சாதனையையும் முறியடிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இல்லை' என்று பி.கே.எல் தொடரின் நட்சத்திர வீரரான பவன் ஷெராவத் கூறியுள்ளார்.
'குறிப்பிட்ட தொகையை சம்பாதிப்பதற்காக எந்த சாதனையையும் முறியடிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இல்லை' என்று பி.கே.எல் தொடரின் நட்சத்திர வீரரான பவன் ஷெராவத் கூறியுள்ளார்.
'என்னை யார் 20 லட்சத்துக்கு வாங்கினாலும் சரி, 2.26 கோடிக்கு வாங்கினாலும் சரி. அவர்களின் அணிக்காக அதே ஆர்வத்துடன் விளையாடுவேன்.' - பவன் ஷெராவத்!
Pawan Sehrawat PKL Auction 2023 Tamil News: 10வது புரோ கபடி லீக் (பி.கே.எல்) தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வருகிற செப்டம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் மும்பையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தொடரில் பங்கேற்கும் 12 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் கழற்றி விடப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளன.
Advertisment
இந்த நிலையில், 105 பி.கே.எல் போட்டிகளில் 987 புள்ளிகளைப் பெற்ற நட்சத்திர வீரரான பவன் செராவத்தை தமிழ் தலைவாஸ் அணி கழற்றி விட்டுள்ளது. இது தொடர்பாக பவன் ஷெராவத் பேசுகையில், "நான் ஏலத்தில் பங்கேற்க உள்ளேன். மற்ற வீரர்கள் மற்றும் அணிகளைப் பற்றி நாம் விரைவில் தெரிந்துகொள்ளலாம். ஆனால் நான் ஏலத்தில் நிச்சயமாக இருப்பேன் என்று எனது சொந்த விஷயத்தைச் சொல்கிறேன்.
சாதனைகளை முறியடிப்பதற்காக நான் ஏலத்திற்கு வரவில்லை. என்னை யார் 20 லட்சத்துக்கு வாங்கினாலும் சரி, 2.26 கோடிக்கு வாங்கினாலும் சரி. அவர்களின் அணிக்காக அதே ஆர்வத்துடன் விளையாடுவேன். ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிக்காக என்னால் முடிந்த அளவு முயற்சி செய்வேன். அதுதான் எனது ஒரே நோக்கம்.
Advertisment
Advertisements
குறிப்பிட்ட தொகையை சம்பாதிப்பதற்காக எந்த சாதனையையும் முறியடிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இல்லை. நான் எந்த அணிக்காக விளையாடினாலும் அந்த அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதுதான் என்னுடைய ஒரே குறிக்கோள்." என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil