புரோ கபடி தொடரில் பங்கேற்கும் 12 அணிகள் மொத்தம் 84 வீரர்களை மூன்று பிரிவுகளில் தக்கவைத்துள்ளன.
Pro Kabaddi 2023 Auction Tamil News: 10வது புரோ கபடி லீக் (பி.கே.எல்) தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வருகிற செப்டம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் மும்பையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தொடரில் பங்கேற்கும் 12 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் கழற்றி விடப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளன.
Advertisment
இந்த நிலையில், 105 பி.கே.எல் போட்டிகளில் 987 புள்ளிகளைப் பெற்ற நட்சத்திர வீரரான பவன் செராவத்தை தமிழ் தலைவாஸ் அணி கழற்றி விட்டுள்ளது. இதேபோல், மற்ற அணிகளும் விகாஷ் கண்டோலா, ஃபாஸல் அட்ராச்சலி மற்றும் பல நட்சத்திர வீரர்கள் வீரர்களை வீரர்களை கழற்றி விட்டுள்ளன.
பவன் செராவத்தை தமிழ் தலைவாஸ் அணி ரூ. 2.26 கோடி கொடுத்து எடுத்தது. இது பி.கே.எல் தொடரில் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த வீரராக அவரை மாற்றியது. ஆனால், அவர் களமிறங்கிய முதல் ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் படுகாயம் அடைந்து வெளியேறினார். அறுவை சிகிச்சை காரணமாக அவர் தொடரில் இருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டது. அவர் போன்ற பெரிய நட்சத்திரங்கள் இல்லாத தமிழ் தலைவாஸ் அணி பயிற்சியாளர் அஷன் குமார் கீழ் வெற்றி நடைபோட்டது. மேலும் அரையிறுதி வரை சென்று சாதனை படைத்தது.
தற்போது அதேபோன்ற ஒரு அணியை கட்டமைக்க தமிழ் தலைவாஸ் அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதனால், பவனை அதிக விலை கொடுத்து தக்க வைக்க இயலாது. அவருக்கு செலவழிக்கும் தொகையை அனுபவம் மற்றும் இளம் வீரர்களுக்கு செலவு செய்து இன்னும் வலுவான அணியை சீரமைக்க முடிவு செய்துள்ளது. அதனால், பவனை அவர்கள் அணியில் இருந்து கழற்றி விட்டுள்ளனர்.
Advertisment
Advertisements
84 வீரர்கள் தக்க வைப்பு
புரோ கபடி தொடரில் பங்கேற்கும் 12 அணிகள் எலைட் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் (ERP) பிரிவில் 22 பேர், தக்கவைக்கப்பட்ட இளம் வீரர்கள் (RYP) பிரிவில் 24 பேர் மற்றும் தற்போதுள்ள புதிய இளம் வீரர்கள் (ENYP) பிரிவில் 38 பேர் என மொத்தம் 84 வீரர்களை மூன்று பிரிவுகளில் தக்கவைத்துள்ளன.
பிகேஎல் தொடரின் ஜாம்பவான் வீரரான பர்தீப் நர்வாலை உ.பி. யோதாஸ் அணி தக்கவைத்துள்ளது. அதேசமயம் அஸ்லாம் முஸ்தபா இனாம்தார் புனேரி பல்டானால் தக்கவைக்கப்பட்டுள்ளார். இதேபோல் சீசன் 9 இல் மிகவும் மதிப்புமிக்க வீரர் விருதை வென்ற அர்ஜுன் தேஷ்வால் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
அணி
தக்க வைக்கப்பட்ட எலைட் வீரர்கள்
தக்க வைக்கப்பட்ட இளம் வீரர்கள்
தக்க வைக்கப்பட்ட புதிய இளம் வீரர்கள்
பெங்கால் வாரியர்ஸ்
-
-
வைபவ் பௌசாஹேப் கர்ஜே, ஆர் குஹன், சுயோக் பாபன் கைகர், பர்ஷாந்த் குமார்
பெங்களூரு புல்ஸ்
நீரஜ் நர்வால்
பாரத், சௌரப் நந்தல்
யாஷ் ஹூடா
தபாங் டெல்லி கேசி
-
நவீன் குமார்
விஜய், மன்ஜீத், ஆஷிஷ் நர்வால், சூரஜ் பன்வார்
குஜராத் ஜெயண்ட்ஸ்
மனுஜ், சோனு
ராகேஷ்
ரோஹன் சிங், பார்தீக் தஹியா
ஹரியானா ஸ்டீலர்ஸ்
கே.பிரபஞ்சன்
வினய், ஜெய்தீப், மோஹித்
நவீன், மோனு, ஹர்ஷ், சன்னி
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்
சுனில் குமார், அஜித் குமார் வி, ரேசா மிர்பகேரி, பவானி ராஜ்புத், அர்ஜுன் தேஷ்வால், சாகுல் குமார்
-
அங்குஷ், அபிஷேக் கே.எஸ், ஆஷிஷ், தேவாங்க்
பாட்னா பைரேட்ஸ்
சச்சின், நீரஜ் குமார்
மனிஷ்
தியாகராஜன் யுவராஜ், நவீன் சர்மா, ரஞ்சித் வெங்கட்ரமண நாயக், அனுஜ் குமார்